ஒரு மறைக்கப்பட்ட ஜீவியம் (A HIDDEN LIFE) வியாழக்கிழமை பிற்பகல், அக்டோபர் 6, 1955 லேன்டெக் உயர்நிலைப்பள்ளி, சிகாகோ, இல்¬னாய்ஸ், அமெரிக்கா அது அருமையானது. நாம் ஜெபிப்போம். எங்கள் பரலோகப் பிதாவே, இந்த அற்புதமான ஐக்கியத்திற்குள் எங்களைத் திரும்ப மீட்டுக்கொண்டு வரும்படி கல்வாரியில் மரித்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்காக நாங்கள் இன்று எல்லாவற்றிற்கும் மேலாக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்போது இந்த நேரத்தில் எங்கள் மேலுள்ள அவருடைய ஆசீர்வாதங்களுக்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, இந்த தேசத்தினுடைய எங்கள் அன்புக்குரிய ஜனாதிபதி அவர்கள்... பிதாவே, அவர் உள்ளே கொண்டுவரப்பட்ட போது, யுத்தம் முடிந்து விட்டதற்காக, நாங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். மேலும் இப்பொழுது, ரஷ்யாவில் சமாதான பேச்சுவார்த்தைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் அனேக மகத்தான காரியங்களும் செய்யப்பட்டுள்ளது போன்று தோன்றுகிறது. மேலும் பிதாவே, எங்கள் தேசத்தின் ஒரு தலைவராக நாங்கள் அவரை நேசிக்கிறோம். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நாங்கள் கேள்விப்படுகிறோம், அவர் ஒரு கிறிஸ்தவர் என்றும் அவர் உம்மை நேசிக்கிறார் என்றும் புரிந்து கொள்கிறோம். பிதாவே, அவர் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் நாங்கள்-நாங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், இந்த நாளில் எங்கள் தேசத்தில் அவ்விதமான ஒரு நபர் ஒரு-ஒரு தலைவராக இருப்பது எங்களுக்கு அவசியமாயுள்ளது. 2. உறுதியான, நல்ல முழு ஆரோக்கியத்தோடு நீர் அவரைச் சுகப்படுத்த வேண்டுமென்று அவருடைய விடுதலைக்காக, ஒருமிக்க சகோதரர்களாக நாங்கள் உம்மிடம் ஜெபத்தை ஏறெடுக்கிறோம், அவர் செய்ய வேண்டியது எல்லாம் உம்பேரில் சார்ந்திருக்க வேண்டும் என்பதுதான் என்பதை அறியும்படிக்கு அவர் மே¬ருக்கும் இந்தத் துன்பங்கள் அவரை உம்மோடு நெருக்கமாக இழுத்து வரும்படிக்கு மாத்திரமே அருகில் கொண்டுவரப்பட வேண்டுமென்று நாங்கள் உம்மிடம் ஜெபத்தை ஏறெடுக்கிறோம். பிதாவே, அவர் தாமே சீக்கிரமாக வெள்ளை மாளிகைக்குத் திரும்புவாராக. இங்கே பூமியில் அவர் ஆட்சி செய்யும் நாட்களெல்லாம், அங்கே தேசங்கள் மத்தியில் தாமே சமாதானம் இருப்பதாக. இதை அருளும், கர்த்தாவே. பரலோகத்தின் மகத்தான ஆட்சியாளராகிய கர்த்தராகிய இயேசு வரும்போது, அப்போது என்ன இருக்கும் என்பதைக் குறித்த ஒரு ருசியை மனிதர்கள் பெற்றுக்கொள்ளட்டும், அப்போது ஒவ்வொரு இருதயத்திலும் சமாதானம் ஆளுகை செய்யும், அங்கே அதற்கு மேலும் யுத்தங்கள் இருக்காது. பிதாவே, இந்த ஆசீர்வாதங்களை அருளும், இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். உட்காரலாம். 3. இந்தப் பாடல்கள் பாடுவதைக் கேட்பதற்கு எனக்கு சற்று காலதாமதம் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன், நான் சகோதரன் வெர்மோவை (Brother Waermo) வெளியில் சந்தித்தேன். நான் சகோதரன் எக்பர்க் அவர்களைப் பார்க்கவில்லை, எனவே நான் மறுபடியுமாக இன்று அதைத் தவறவிட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். நான் அவ்வாறு பாடுவதை விரும்புகிறேன், நல்ல பழமை நாகரீகமாக பாடுவது எனக்குப் பிடிக்கும். சொல்லுங்கள், இங்கே உங்களுக்குக் கொஞ்சமாக ஒருசில பிரசங்கிமார்கள் உண்டு, நான் அதைக் கூறுவேன், அந்த... இந்த அருமையான கன்வென்சன் கூட்டத்தைக் காண்பது மிகவும் அருமையாக உள்ளது, இன்று உங்களிடம் உரையாற்றுவதும், கர்த்தரைக் குறித்து உங்களிடம் பேசுவதும் என்னுடைய பெரிய தருணமாயுள்ளது, அதைக் குறித்து உங்களில் அநேகர் என்னிடம் கூற முடிந்தது என்று எனக்குத் தெரியும். நான் உங்களில் அநேகருக்கு வெறுமனே ஒரு குழந்தையாகத்தான் இருக்கிறேன், பேருரையாற்றும் ஊழியக்காரர்கள் என்பதற்கு அது வரும்போது, நான் அதைக் குறித்து மிகவும், மழலையர் பள்ளியைச் (kindy) (சேர்ந்தவனைப்போல) சற்றே நாணமுள்ளவனாயிருக்கிறேன். 4. ஆனால் விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது என்று உங்களிடம் கூறப்பட்டது. மேலும் எனது நண்பராகிய ஜோசப் அவர்கள், நிச்சயமாகவே அன்றொரு நாள் அதில் சிலவற்றை உபயோகித்தார், அவர் கூட்டத்தில் அறிவிப்பு செய்தபோது... அவர் ஒருபோதும் என்னிடம் கேட்கவில்லை; அவர், 'நான் அதை விளம்பரம் செய்யலாமா?' என்று கூறினதால், நான், 'வேண்டாம், சகோதரன் ஜோசப் அவர்களே' என்றேன். ஆனால் அவர் அதை விளம்பரம் செய்தபிறகு, நல்லது, நான் - வந்து கலந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. எனவே உங்களுக்கு விருப்பமானால், நீங்கள்-நீங்கள் சற்றுநேரம் என்னோடு சகித்துக்கொள்ள வேண்டும், அதைச் செய்வதற்கு நீங்கள் மிகவும் தயவுள்ளவர்களாய் இருக்க வேண்டும். மேலும் இந்தப் பிற்பகல் வேளையில் சற்றுநேரம் பேச வேண்டும், அதன்பிறகு இன்றிரவு, இன்றிரவில் நடக்கும் ஆராதனைக்காக ஆயத்தப்படுங்கள்... 5. தேவனாகிய கர்த்தருடைய இந்த மகத்தான அசைவுக்காகவும், இந்த -- இங்கேயிருக்கும் இந்தக் கன்வென்சன் கூட்டத்திற்காகவும், இந்த பிலதெல்பியன் சபைக்காகவும், சகோதரன் போஸ் அவர்களுக்காகவும், அவருடைய எல்லா உத்தியோகஸ்தர் குழுவிற்காகவும், சிகாகோ மற்றும் ஏறக்குறைய சுற்றிலும் உள்ள ஜனங்களுக்காகவும் நாங்கள் எல்லாரும் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஜனங்களாகிய உங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். என்னுடைய அபிப்ராயத்தின்படி, அமெரிக்காவின் முதுகெலும்பை பாதுகாக்கிறவைகள் இங்கேயிருக்கும் இதைப்போன்று அப்படிப்பட்ட காரியங்கள் தான். அமெரிக்காவி¬ருக்கும் நமக்கு உதவி செய்யும்படியாக இங்கே எந்த கர்த்தராகிய இயேசுவும் இல்லாமல் இருந்தால், நாம் எந்த அமெரிக்காவையும் கொண்டிருந்திருக்க மாட்டோம். அவை எல்லாவற்றிற்கும் பிறகு, ஒவ்வொரு தேசத்தின் முதுகெலும்பு அதனுடைய நல்ஒழுக்கங்கள் தான். ஒரு தேசத்தில் நல்லொழுக்கங்கள் விழுந்து போகும்போது, அந்தத் தேசம் போய் விட்டது. தாய்மையை உடைத்துப் போடுவீர்களானால், நீங்களும் கூட உடைந்து (அழிந்து) போவீர்கள். மற்ற தேசங்கள் எல்லாமே அவ்வாறு ஆகியிருக்கின்றன, நம்முடைய தேசமும் விதிவிலக்கல்ல. 6. யுத்த கருவிகள் அவர்களுடைய கடைசி நேரத்திற்காக குவியலாக குவிக்கப்படும் போதும், இராணுவ இறுதிச் சடங்களில் ஒ¬க்கப்படும் இசை கடைசி நேரத்திற்காக ஒ-க்கப்படும்போதும், அந்த நேரம் மகத்தான நேரம் என்று நம்புகிறோம், அது சீக்கிரத்தில் நடக்கும், அது மிக அருகாமையில் உள்ளது, அப்போது இயேசு இராஜா வந்து, இங்கே பூமியின்மேல் ஆளுகையை ஏற்றுக்கொள்வார். நாமெல்லாரும் அதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஆகையால் தான் இந்தக் கன்வென்சன் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன, ஆகையால் தான் நாமெல்லாரும் ஒன்றாகக் கூடிவந்திருக்கிறோம், ஏனென்றால் பேசுவதற்கு நமக்குப் பொதுவான காரியங்கள் உள்ளன. நிச்சயமாக நம்முடைய பேச்சின் முக்கிய கருத்து தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவாகத்தான் இருக்கிறது. இப்பொழுது இருக்கிற இந்தக் காரியங்களில், நான் தற்போதைய நேரங்களை நோக்கிப் பார்த்திருந்தால், நான் மிகவும் ஊக்கமிழந்த ஒரு நபராக இருந்திருப்பேன். ஆனால் ஒருசமயம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன், ஒரு மனிதன் கூற நான் கேட்ட ஒரு சிறு காரியம் தான் அது. மிகச்சிறப்பாக ஓட்டுபவருக்கு அவர்கள் ஒரு சுவின் மிதிவண்டியை கொடுக்கப் போவதாக இருந்தனர். நான் அதை இந்தச் சபையிலோ அல்லது இந்த ஜனங்கள் மத்தியிலோ எப்பொழுதாவது மேற்கோள் காட்டினேனா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. 7. ஒரு-ஒரு பன்னிரண்டு அங்குல மரப்பலகையில் 100 கெஜ தூரம் ஓட்ட முடியும் பையன் ஒரு-ஒரு புதிய சுவின் மிதிவண்டியைப் பெற்றுக்கொள்ள முடியும். பட்டணத்தைச் சுற்றிலுமுள்ள பையன்களில் அநேகர், அவர்களால் அதை ஓட்ட முடியும் என்றும், அந்தப் போட்டியில் வெற்றி பெறப்போவதாகவும் நினைத்தனர். அங்கே அவர்களிடம் ஒரு சிறு பையன் இருந்தான், அவன் ஒருவிதத்தில் பெண்தன்மை கொண்ட ஒரு சிறுவனாயிருந்தான். அவன் அதில் வெற்றி பெறப்போவதில்லை என்று அவர்கள் நிச்சயமாயிருந்தனர். இவ்வாறாக எல்லா பையன்களும் அவர்களுடைய...ல் ஏறினார்கள். ஒருவர் பின் ஒருவராக அதை ஓட்ட முயற்சித்தார்கள், பெண்தன்மை கொண்ட அந்தச் சிறு பையனைத் தவிர மற்ற எல்லாரும் அதை விட்டு கீழே விழுந்து விட்டார்கள். அவன் அந்த மரப்பலகையின் இறுதிவரை ஓட்டிச் சென்று, இறங்கி, அந்த சுவின் மிதிவண்டியை வென்றான். உடனே மற்ற பையன்கள் எல்லாரும் சுற்றி வந்து, 'நீ எவ்வாறு அதைச் செய்தாய்?' என்று கேட்டார்கள். அவன், 'இப்பொழுது, தோழர்களே, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நான் உங்களிடம் கூறுகிறேன். அவர்கள் உங்களைத் துவக்கி வைத்தபோது...' (அவர்கள் இவர்களை சற்று தள்ளிவிட்டனர், அப்பொழுது அவர்களால் ஓட்ட ஆரம்பிக்க முடிந்தது, அவர்களைப் பிடித்து, அவர்களைத் துவங்க விட்டனர்.) 'நீங்கள் இவ்விதமாக கீழே நோக்கிப் பார்த்துக்கொண்டே, உங்கள் மிதிவண்டியை பலகையின்மேல் தொடர்ந்து ஓட்ட முயற்சித்துக் கொண்டிருந்தீர்கள்' என்றான். ஆனால், 'நானோ ஒருபோதும் இங்கே கீழே கவனிக்கவில்லை. நான்... பாருங்கள், நீங்கள் அதைச் செய்கிறீர்கள், அது உங்களைப் பதட்டமடையச் செய்து, நீங்கள் விழுந்து விடுகிறீர்கள். நானோ என்னுடைய கண்களை அந்த முடிவின்மேல் வைத்து, எல்லையை நோக்கியே தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன்' என்றான். அதுதான் அது. சகோதரர்களே, நாம் சரியாக இங்கே சுற்றிலும் நோக்கிப் பார்ப்போமேயானால், நாம் பதட்டமடைந்து விடுவோம், ஆனால் நாம் அந்த முடிவை, இறுதியை நோக்கிப் பார்ப்போம். 8. இன்று சகோதரன் ஜேக் அவர்கள் சற்றுமுன்பு உணவு மேஜையில் வைத்து, என்னுடைய இருதயத்தில் மிகவும் ஆழமாகத் தொட்ட (struck) ஏதோவொன்றை மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தார், ஒரு சிறு பையன் வழிதவறிப் போயிருந்ததாக அது கூறினது, அது ஐயர்லாந்து அல்லது ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பையன் என்று நம்புகிறேன். திரும்பி வருவதற்கான தன்னுடைய வழியை எப்படி கண்டுபிடிப்பது என்று அவனுக்குத் தெரியாதிருந்தது. எனவே ஜனங்கள் அவனைச் சூழ்ந்துவந்து, ... கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவன், 'நல்லது' என்றான், சொன்னான்... பட்டணத்திலே அவன் ஒரு மகத்தான பெரிய சிலுவை இருக்கும் ஏதோவொரு இடத்திலுள்ள மலையின்மேல் ஜீவித்தான், அவன், 'நீங்கள் அந்தச் சிலுவையை எனக்குக் காண்பிப்பீர்களானால், என்னால் வீட்டிற்குப் போக முடியும்' என்றான். அது சரியே. அது சரிதான். சிலுவையை உங்களால் எனக்குக் காண்பிக்கக் கூடுமானால், வீட்டிற்குப் போகும் என்னுடைய வழியை நான் கண்டுபிடித்து விடுவேன். அது - வீட்டிற்குப் (போகும்) வழி அதுதான், இல்லையா. ஆமென். 9. இப்பொழுது, இவ்விதமான ஒரு சபையாரிடத்தில் பேச எனக்குத் தெரியாது; நான் அப்படியே இங்கேயுள்ள வேதவாக்கியங்களில் ஒன்று அல்லது இரண்டு சிறு வசனங்களை வாசித்து, பிறகு ஒருக்கால் என்னுடைய சொந்த பழைமை நாகரிகமான ள்ஹள்ள்ஹச்ழ்ஹள் வழியில் (sassafras - என்பது இலையை உதிர்க்கும் வடகிழக்கு அமெரிக்க மரமாகும் - மொழிபெயர்ப்பாளர்.) சற்றுநேரம் வார்த்தையின்பேரில் பேசலாம் என்று எண்ணினேன், அவ்வாறு அதைச் செய்யலாம் என்று நினைத்தேன். எனவே எபிரெயர் 10-ம் அதிகாரம் 19-ம் வசனத்தில், நாம் இதை வாசிக்கிறோம்: ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு ... அவருடைய (இயேசுவுடைய) இரத்தத்தினாலே ... தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், நமது கர்த்தர் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிக்கும்படியாக நாம் அவரிடம் கேட்போம். பிதாவே, வார்த்தையைக் கொண்டிருப்பதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், விசுவாசம் வார்த்தையைக் கேட்பதன் மூலமாக வருகிறது. எங்களைத்தானே புதுப்பித்துக்கொள்வதற்காக, நாங்கள் இன்று உம்முடைய ஊழியக்காரர்களாகவும், மனிதர்களாகவும் ஸ்திரீகளாகவும் ஊழியக்களத்தி¬ருந்து வந்து இங்கே இந்தக் கன்வென்சன் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்... பரலோகப் பிதாவே, நீர் எப்போதும் செய்திருப்பது போன்று, இந்தப் பிற்பக¬ல் மீண்டுமாக எங்களிடத்திற்கு வர வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், நீர் அவ்வாறு செய்வீர் என்றும், நீர் இன்று எங்களை ஒருமிக்க ஆசீர்வதிப்பீர் என்பதாகவும் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறீர், உமது வார்த்தையானது ஒவ்வொரு இருதயத்திற்குள்ளும் அதனுடைய இளைப்பாறும் ஸ்தலத்தைக் கண்டடைவதாக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 10. நான்... ஒருக்கால்... என்று நினைத்தேன், சற்று முன்பு தான் தெரியும், சென்ற சாயங்காலத்தில், நான் எதையும் ஆயத்தம் பண்ணவேயில்லை, ஏனென்றால் வழக்கமாக நான் அங்கே போகும்போது, வேறு ஏதோவொன்று இருக்கிறது. ஆனால் இதன்பேரில் நான் சிந்திக்க நேர்ந்தது: 'மகாபரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே தைரியம் உண்டாயிருக்கிறது.' நான் இந்தப் பிற்பக¬ல், 'ஒரு மறைக்கப்பட்ட ஜீவியம்' என்பதன் பேரில் சற்று நேரம் ஒரு சிறு தலைப்பைப் பேசலாமே என்று நினைத்தேன். 11. இப்பொழுது, இந்தக் கன்வென்சன் கூட்டங்கள் மற்றும் அதைப் போன்றவற்றி-ருக்கிற பெரும்பாலும் நம்மில் எல்லாருமே எவ்வாறு தேவனோடு நெருக்கமாக நடப்பது என்பதைக் கண்டுகொள்ளவே முயற்சிக்கிறோம். நான் - இந்தப் பிற்பக¬ல், அவர்கள் உங்கள் சகோதரர்கள் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன், அந்தவிதமாகத்தான் உள்ளது. இப்பொழுது, நான் ஒருக்கால் இயற்கைக்கு மேம்பட்டவைகளைக் குறித்து பேசலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதை எவ்வாறு அணுகுவது என்று எனக்குத் தெரியவில்லை. அது உங்களுக்கு எவ்வளவு அதிகம் விளங்காத புதிராக இருக்கிறதோ எனக்கும் அது அவ்வளவு மர்மமான விசித்திரமாகத்தான் உள்ளது. அப்போது கிறிஸ்துவோடுள்ள மறைக்கப்பட்ட ஜீவியத்தை எண்ணிப்பார்த்தேன். நாம் மறைந்து கொள்ளக்கூடிய ஏதோவொரு வழி, அவை எல்லாவற்றி¬ருந்தும் விலகிச்சென்று, கிறிஸ்துவோடு ஜீவித்தல். 12. நான் ஹென்றி குரோட்டையா பார்த்துக் கொண்டிருக்கிறேன். சகோதரன் ஹென்றி அவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களையும் சகோதரனையும் நான் நீண்ட காலமாகப் பார்க்கவில்லை. நான் அப்படியே திரும்பிப்பார்க்க நேர்ந்தபோது, தகப்பனாரைக் கண்டு, அவரை அடையாளம் கண்டுகொண்டேன். நான் பெரிய அளவில் நிலைகுலைந்துபோய் அல்லது ஏறக்குறைய எட்டு மாதங்களாக ஊழியக்களத்தை விட்டு விலகி வந்த போது, அவர்கள் உண்மையான சகோதரனாகவும் எனக்குத் தகப்பனாகவும் இருந்தார்கள். அவர்கள் சரியாக எல்லா நேரமும் என்னோடு இருந்தார்கள். சகோதரன் குரோட் அங்கேயிருந்த அந்த நாளை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன், அப்போது நாங்கள் ஜெபம் பண்ணுவதற்காக வெளியே சோள வயலுக்குச் சென்றோம். நான் மிகவும் பதட்டமாக இருந்தேன்; நான் மிக நீண்ட நேரமாக தரிசனத்தில் இருந்தேன், நான் உள்ளே இருந்தேனா அல்லது வெளியே இருந்தேனா என்று என்னால் கூற இயலவில்லை. சகோதரன் குரோட் அவர்கள் என்னோடு ஜெபிப்பதற்காக முழங்கால்படியிட்ட போது, அவரை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவர் தமது கரங்களை என்னைச் சுற்றிலும் போட்டுக்கொண்டு, அப்படியே எளிமையாக இவ்விதமாகச் சென்னார், 'இப்பொழுது, தகப்பனாகிய தேவனே, நீர் வந்து சகோதரன் பிரன்ஹாமுக்கு உதவி செய்வீரா? பிதாவாகிய தேவனே, நீர் வந்து சகோதரன் பிரன்ஹாமுக்கு உதவி செய்வீரா?' என்றார். சகோதரன் குரோட் அவர்களே, அது எப்போதுமே என்னோடு தங்கியிருந்தது. ஓ, சகோதரன் குரோட் அவர்களே, ஏதோவொரு நாளில் இப்படி நடக்கும் என்று நம்புகிறேன், என் கரத்தை உம்மைச் சுற்றிலும் போட்டுக்கொண்டு, சிங்காசனத்திற்குக் கீழிருந்து பாய்ந்து வரும் ஜீவத்தண்ணீர் ஊற்றுகள் இருக்கும் என்றென்றும் பசுமையான மரங்களின் அருகில் உட்காரும் போது, அது எப்படி இருக்கும். அப்போது நாம் நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சந்நிதியில் இருந்து, என்றென்றும் என்றென்றுமாக அவர் சமுகத்தில் ஜீவிப்போம். 13. இப்பொழுது, தேவன் வேதாகமத்தை மிக எளிமையாக செய்திருக்கிறார். கல்வியறிவற்ற என்னைப்போன்ற ஒரு நபரும் கூட சுவிசேஷத்தைப் பேசவும், பிரசங்கம் பண்ணவும் ஒரு வாய்ப்பை கொண்டிருக்கும்படியாக, சுவிசேஷத்தை மிக எளிமையாக ஆக்கியிருக்கிறார். இன்று அங்கே எழுந்து நிற்கவும், இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் பண்டிதர்களுக்கு முன்பாகவும், தேசத்திலேயே அதிபுத்திசா¬களான மனிதர்களில் சிலருக்கு முன்பாகவும் இருப்பதை அறிந்து கொள்வதும் எவ்வளவு வேடிக்கையான உணர்வாக இருக்கும் என்று வந்து கொண்டிருந்த சகோதரர்களிடம் நான்-நான் கூறிக்கொண்டிருந்தேன், என்னுடைய இலக்கணம் எவ்வளவு மோசமாக இருக்கிறது, மேலும் எப்படி, ஓ, தேவையான தகுதியில்லாதவனாயிருக்கிறேன்... ஆனால், நீங்கள் சில பிஷப்புகள் மற்றும் அதைப் போன்றவர்களுக்கு முன்பாக இருக்க வேண்டியிருந்தால், அனேகமாக நான் உணருவது போன்றே நீங்கள் எல்லாரும் உணருவீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் சகோதரர்களே, தேவன் வேதசாஸ்திரத்தில் அதிகமாக வாசம் பண்ணுவதில்லை என்று உங்களுக்குத் தெரியும். அவர் அன்பிலும் தாழ்மையிலும் தான் வாசம் செய்கிறார், அங்கே நீங்கள் எல்லாரும் உண்மையாகவே, அவரோடு பழகி, அவரை அறிந்து கொள்ள முடியும். அவர்-அவர் கையளவான கொஞ்ச பேர்களையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தையோ தெரிந்து கொள்ளாமல் இருந்ததற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவர், 'விருப்பமுள்ள எவரும்' என்றார். எனவே உள்ளே வந்து, ஐக்கியத்தைக் கொண்டிருந்து, அவரைக் குறித்துப் பேசுவதற்கு, அது எனக்கும் உங்களுக்கும் கூட ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. 14. இப்பொழுது, தேவன் அதைப் பழைய ஏற்பாட்டில் மிகவும் அற்புதமாகச் செய்திருக்கிறார், அவர், நான் வழக்கமாக அங்கே எப்பொழுதாவது ஒரு தலைப்பிற்காக அடைக்கலத்திற்காகப் (ழ்ங்ச்ன்ஞ்ங்) போகிறேன்... அவர் தம்மையும், தாம் செய்கிறவைகளையும் வெளிப்படுத்தும்படியாக, அவர் பழைய ஏற்பாட்டை உவமைகளாகவும் அடையாள வடிவங்களாகவும் (symbolic forms) செய்திருக்கிறார், அவருடைய சித்தம் மற்றும் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பற்றிய ஒரு கருத்தை சாதாரண சிந்தையும் கொண்டிருக்க முடியும். அனேக சமயங்களில் பழைய ஏற்பாட்டில், பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டை முன்னடையாளப்படுத்துவதைக் கண்டுபிடிக்கும்படி நான் எப்படியாகத் திரும்பிச் சென்றிருக்கிறேன். தேவன் எப்போதுமே அதைச் செய்திருக்கிறார், இப்பொழுது புதிய ஏற்பாட்டில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதை அவர் பழைய ஏற்பாட்டில் முன்நிழ¬ட்டுக் காட்டியிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் தேவனை அசட்டை செய்து புறக்கணித்து, அவரை விட்டு விட்டவர்கள் எல்லாருக்கும் என்ன சம்பவித்தது என்பதை திருஷ்டாந்தத்தின் மூலமாக நம்மால் காண முடியும். பழைய ஏற்பாட்டில், யேகோவாவில் விசுவாசம் கொண்டிருக்கும்படி, துணிந்து அடியெடுத்து வைத்தவர்களுக்கு என்ன சம்பவித்தது என்பதையும் நாம் காண்கிறோம். இப்பொழுது, நாம் நம்முடைய தெரிந்தெடுத்தலைச் செய்து கொள்ளலாம். ஒரு சுயாதீனமான தேசத்திற்காகவும், தேவனிடமுள்ள விசுவாசத்தில், நீண்ட பிரயாணத்தைத் துவங்கி, இந்த பூமியை விட்டு தூரமாக பறந்து செல்லும்படியாக நாம் ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளும் ஒரு இடத்திற்காகவும் நாம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். உங்களால் அதைச் செய்ய முடியாத நிறைய இடங்கள் அங்கே இருக்கின்றன என்பதற்காக நான் இன்று அதைக் குறித்து சந்தோஷமாயிருக்கிறேன். 15. இப்பொழுது, உதாரணமாக, அங்கே முற்காலத்தில், பழைய ஏற்பாட்டில், தேவன் எப்படியாக தம்முடைய உவமைகள் எல்லாவற்றையும் கொடுத்தார், இன்றைக்கு ஒரு நிழலாக இருக்கும் தம்முடைய-தம்முடைய காரியங்களை தந்தார், அப்படியானால் நான் வேதாகமத்தைப் போதிக்கக் கூடிய ஒரே வழி அதுதான். அவர்கள் பெரிய கிரேக்க வார்த்தைகளைக் குறித்தும் மற்றவைகளைக் குறித்தும் பேசுகிறார்கள், அவர்கள் எல்லாவிதமான இடங்களிலும் என்னைக் கட்டிப்போட்டார்கள். ஆனால் நான் திரும்பிப் பார்த்து தேவன் அங்கே பின்னால் ஒரு முன்னிழலாக என்ன செய்தார் என்பதைக் காண்பேன் என்றால், அப்போது அவர் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற ஏதோவொரு பொதுவான கருத்தைக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் அது ஒரு நிழலாக இருந்தது. நான் மேற்கு நோக்கி போய்க் கொண்டிருந்து, என்னுடைய - சூரியனானது கிழக்கில் உதிக்குமானால், என்னுடைய நிழல் எனக்கு முன்பாக இருக்கிறது, நான் ஒருபோதும் என்னைக் கண்டிராமல் இருந்தாலோ, அல்லது நான் எவ்விதமாகத் தோற்றமளிக்கிறேன் என்பதையோ, அல்லது ஒரு மனிதனா என்பதையோ ஒருக்காலும் அறிந்திராமல் இருந்தாலும், நான் என்னுடைய நிழலைப் பார்க்கும்போது, என்னுடைய உருவத்தைக் குறித்த ஏதோவொரு கருத்தைக் கொண்டிருப்பேன். பழைய ஏற்பாடானது கிறிஸ்துவினுடைய வருகையின் நிழலாக இருக்கிறது, எல்லாமே சிலுவைக்கு முன்னிழலாக இருக்கிறது. கிறிஸ்துவுக்குள், தேவனுடைய மீட்பு எல்லாமும், அவருடைய திட்டங்கள் எல்லாமும், இரட்சிப்பின் திட்டம் எல்லாமும், எல்லாமே கல்வாரியில் சந்திக்கப்பட்டு விட்டது. இப்பொழுது, பழைய ஏற்பாட்டில், எவ்வளவு அழகாயுள்ளது, இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த பரிசுத்த ஆவியை தேவன் எப்படியாக முன்னடையாளப்படுத்தியிருக்கிறார். அவர் இந்தக் கன்வென்சன் கூட்டங்களில் எப்படியாக அந்த ஒழுங்குகளை முன்னடையாளப்படுத்தியிருக்கிறார், நம்மால் எப்படியாக ஐக்கியத்திற்குள் ஒருமித்து வந்து, ஒன்றாக ஒரு-ஒரு ஐக்கியத்தைக் கொண்டிருக்க முடிந்தது. 16. அங்கே பின்னால் சபையின் ஆரம்ப ஆதிகாலங்களில் நாம் எப்படியாக காண்கிறோம், தேவன் எப்படியாக இன்று அந்த இடத்தை முன்னடையாளப்படுத்தியிருக்கிறார், அங்கே சகோதரர்களாகிய நாம் இந்த அடுத்த ஆசீர்வாதத்திற்காக இப்பொழுது பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாம் ஒரு-ஒரு கடன்வாங்கிய நேரத்தைப் போன்ற ஒரு நேரத்தில் இருக்கிறோம் என்பது எல்லாருக்கும் தெரியும். எல்லா -- எல்லா காலங்களிலும் எப்பொழுதாவது உலகத்தை உண்மையாகவே மிகக்கடினமாக அசைத்த ஒரு எழுப்புதலை ஏறக்குறைய கொண்டு வந்த, தெய்வீக சுகமளித்த¬ன் மகத்தான ஆசீர்வாதம் மற்றும் இயற்கைக்கு மேம்பட்டவைகளின் வல்லமைகள் வெளியே போயிருக்கின்றன. கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களில் இருக்கிறதைப் போன்று கிறிஸ்தவமானது முழு உலகத்தையும் அசைத்திருக்கிற ஒரு நேரமானது எந்தக் காலத்திலும் ஒருபோதும் இருந்ததில்லை. அது சரியே. எப்பொழுதாகிலும், தேசத்திலோ, இடத்தின் கீழேயோ, வானொ¬யின் மூலமாகவோ, சுவிசேஷகர்களின் மூலமாகவோ... மூலமாகவோ. அவர்கள் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிராத இடங்களாகிய வித்தியாசமான தேசங்களிலுள்ள ஒரு இடத்திற்குள் நாம் போகிறோம், சாதாரண மிஷனரி கொஞ்சம் கைப்பிரதிகளை விநியோகித்திருக்கும் இடத்தை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள் (அது அருமையானது தான்), ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட காரியங்கள் கிரியை செய்வதை அவர்கள் காணும்போது, பத்தாயிரக்கணக்கான அஞ்ஞானிகள் சிலுவையண்டை விழுந்து, கர்த்தராகிய இயேசுவை சேவிக்கிறார்கள். அது வல்லமைமிக்க அசைவாக இருந்திருக்கிறது. 17. இப்பொழுது, நாம் நீண்ட காலமாக இந்த பூமியையே பிடித்திருக்கிறோம், நாம் அதோ அங்கேயுள்ள, ஏதோவொரு இடத்தில், தேவனுடைய பெரிதான பரம இரகசியங்கள் சபைக்கு அறியப்பண்ணும்படியான, வேறொரு திரைக்குள் அடியெடுத்து வைப்பதற்கான ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்று என்னுடைய முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். நானும் ஒன்றுக்காக, செய்தி வரும்போது, அதைக் கேட்கும்படிக்கு காதுகளையும் கண்களையும் இருதயத்தையும் திறந்தபடி நான் வைத்து, அதை பரிசோதித்துப் பார்க்கிறேன். சாத்தானும் அநேக கள்ளமாக ஓடுபவர்களை உருவாக்கிக் கொண்டிருப்பான், ஆனால் அதை அப்படியே விட்டுவிடுங்கள்; ஞாபகமிருக்கட்டும், நீங்கள் அதைக் காணும்போது, உண்மையான ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது என்பதை மாத்திரமே அது குறிப்பிட்டுக் காட்டுகிறது. (நான் சென்ற இரவு சொன்னது போல), தேவனுடைய உண்மையான அணிகலன் புறப்பட்டு வரும்போது, அதை தடைசெய்யும்படியாக சாத்தான் எல்லாவற்றையும் செய்வான். நீங்கள்-நீங்கள் அதைக் கேட்பீர்கள். ஆபேலைப் பிடிப்பதற்காக அவன் ஒரு தடையை ஏற்படுத்தினான். யோசேப்பை பிடிப்பதற்காகவும், இயேசுவையும் மற்றவர்களையும் பிடிப்பதற்காகவும் அவன் ஒரு தடையை ஏற்படுத்தினான், அவன் அதைச் செய்வான், மோசேயைப் பிடிப்பதற்காகவும் ஒன்றை ஏற்படுத்தினான். சாத்தான் அதை நிறுத்த முயற்சிக்கும் அந்தக் காரியங்களை நீங்கள் கவனிக்கலாம். நாம் காண்கிறபடி, அங்கே தான், அநேக சமயக்கோட்பாட்டு முறைகளும் (cults) காரியங்களும் தேசத்தின்மேல் எழும்பிக் கொண்டிருக்கின்றன என்று நம்புகிறேன், அவை என்னவென்றால், 'கவனமாயிருங்கள்; அது சீக்கிரத்தில் இங்கே இருக்கும்' என்று கூறும்படியான விளக்குக் கம்பம் ((light post) மாத்திரமே. 18. நான் நம்முடைய சகோதரர்கள் மத்தியில் கவனித்திருக்கிறேன், உங்களில் அநேகர், முழு சுவிசேஷ ஜனங்களாக உங்களுக்குள் வருகையில், நானே பாப்டிஸ்டு சபையி¬ருந்து வந்து, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்த உபதேசமானது பரிசுத்த ஆவியின் ஒரு தனிப்பட்ட கிரியை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்... அப்போது நான் நினைத்தேன், நாங்கள் - மார்டின் லூத்தர் விசுவாசத்தின் மூலமாக நீதிமானாக்கப்படுதலை அடைந்து, அதுதான் அதை தீர்த்து வைக்கிறது என்று எண்ணினார். அது அவருடைய நாளின் வெளிச்சமாக இருந்தது. அவர் அதை பிரசங்கித்து, அதை விசுவாசித்து, அதைப் பற்றிக்கொண்டார், அது அந்நாளின் வெளிச்சமாக இருந்தது. அதன்பிறகு அவர் வேறொரு திரைக்குள் பிரவேசித்தார், ஜான் வெஸ்¬ என்ற ஒரு மனிதன்... கால்வினிஸம் தேசத்தை வீசியடித்துச் செல்ல (sweep) துவங்கின போது, 'தேவன் என்னச் செய்யப் போகிறார், அவர் செய்வார், ஒரு எழுப்புதலைக் கொண்டிருப்பது எந்த நன்மையும் நமக்குச் செய்யாது' என்று அவர்கள் கூறும்படியாக அமைதியாகி விட்டனர். அப்போது தேவன் ஜான் வெஸ்¬யை எழுப்பினார், அவர் நிச்சயமாகவே கால்வினிஸத்தை தரையோடே நொறுக்கிப் போட்டார். அது அதனுடைய சரியான சமநிலையைக் கொண்டிருக்க வேண்டிய இடத்திற்கான ஒரு கட்டத்திற்கு, பரிசுத்தமாக்கப்படுத¬ன் கிரியைகளுக்குக் கீழாக அது இருந்தது, அது கிருபையின் இரண்டாவது கிரியையாக இருந்தது. நசரீன்கள் அதைத் தொடர்ந்தார்கள், அதன்பிறகு அடுத்ததாக அதனோடு சேர்ந்து பெந்தெகோஸ்தேகாரர்கள் வந்தார்கள், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமானது அதிக உயரத்துக்குள் மேலே தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது. 19. இப்பொழுது, சகோதரர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்ற போது, அவர்கள், 'இதுதான் உச்சநிலை; இதைப் பற்றியதெல்லாம் அவ்வளவு தான்' என்று கூறினார்கள். ஆனால், சகோதரர்களே, அது தவறாகும். புரிகிறதா? அங்கே தேவனுடைய வல்லமைக்கு எந்த உச்சநிலையும் கிடையாது. நாம் தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறோம்; இது தேவனுடைய வரம்பற்ற வளங்களாகும், அது ஒருபோதும் இன்னும் உபயோகிக்கப்படவில்லை (tapped), நாம் அதைக் குறித்து எதையுமே அறிந்திராத ஆசீர்வாதங்களும் வல்லமைகளும் (இருக்கின்றன). அது ஒருபோதும் பிரதான தூதர்களுக்கும் கூட வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை, விசுவாசிக்கும் அவருடைய சபைக்காக அது அப்படியே எதிர்காலத்துக்கென்று வைக்கப்பட்டுள்ளது (laying ahead). 'தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு பண்டகசாலையில் வைத்திருப்பவைகள், கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயங்களில் தோன்றவுமில்லை.' எனவே நாம் மேலே சென்று நம்முடைய உரிமைகளை உரிமைகோருவோம். தேவன் வாசல்களைத் திறந்து, வரவேற்பு கம்பளத்தை வைத்து கையசைத்து அருகே வரும்படி சொல்லுகையில், நாம் மேலே அதிக ஆழத்திற்குள் சென்று, ஒருபோதும் நம்மை நாமே வசதியாக இருந்து விடாதீர்கள், நம்மை நாமே ஸ்தாபித்துக் கொள்ளும்படியாக அவ்வாறு ஒருபோதும் செய்து விடாதீர்கள், இது - 'நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், அவ்வளவு தான்' என்ற ஒரு இடத்திற்குள் ஒருபோதும் வந்து விடாதீர்கள். நாம் இதை விசுவாசித்து, அதனோடு கூட நாம் எவ்வளவு அதிகமாக தேவனிடமிருந்து கேட்க முடியுமோ அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவருடைய அபரிமிதமான இரக்கங்களின் கரத்தி¬ருந்து உங்களால் கூடுமான எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளும்படிக்கு, அது கர்த்தராகிய இயேசுவை நேசிக்கும் ஒவ்வொரு மனிதன் மற்றும் ஒவ்வொரு ஸ்திரீயுடைய நோக்கமாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அதுதான் என்னுடைய இருதயமாக உள்ளது. ஆகையால் தான் நான் ஒருபோதும் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்து கொள்வதில்லை, அல்லது எந்தக் குழுவின் பக்கமும் நான் சேர்ந்து கொள்ளவதில்லை, ஏனென்றால் தேவனுடைய அன்புக்காகவும், அவர் எனக்கு எதைக் கொடுத்திருக்க முடியுமோ அதற்காகவும் நான் என்னைத்தானே முழுவதும் திறந்து வைக்க விரும்புகிறேன். 20. நான் ஒருமுறை வேதாகமத்தில் கவனித்தேன், இப்பொழுது சற்று நேரம் அதைப் பேசலாம். பழைய ஏற்பாட்டில் ஒரு வீட்டில் ஒரு குமாரன் பிறந்த போது, அவன் பிறந்த போதே ஒரு குமாரனாகத் தான் இருந்தான். அவன் ஒரு வீட்டிற்குள் பிறக்கும் போதே ஒரு குமாரனாக ஆகிவிடுகிறான். அந்நாட்களில், சாதாரணமான, குறிப்பிடத்தக்க, கிழக்கத்திய வீட்டில், அந்த மகனுக்கு ஒரு ஸ்தானம் கொடுக்கப்பட்டிருந்தது, மற்றும் அந்தப் பிள்ளையை வளர்க்கும்படியான ஒரு பயிற்சி ஆசானும் (tutor) உண்டு. புதிய ஏற்பாட்டில், பவுல் அதைக் குறித்து அழகாகப் பேசுகிறான், அந்தப் பயிற்சி ஆசான் எப்படியாக அந்தப் பிள்ளையை வளர்க்க வேண்டியிருந்தது, மேலும் நாம்... நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற உபாத்தியாய் (tutor) இருந்தது. ஆனால் அதன்பிறகு, அந்தப் பிள்ளையானது, அவன் பிறந்த போது, பரிசுத்த ஆவியால் மறுபடியும் பிறந்த இன்றுள்ள சபைக்கு ஒரு மாதிரியாய் இருந்தான். தேவன் தம்முடைய சபைக்குப் போதித்து, அதை வளர்த்தி, வேறு ஏதோவொன்று சம்பவிப்பதற்கான நேரமாகிய இப்போதைக்கு அதை வளர்த்துக்கொண்டு வருகிறார் என்று நான் நம்புகிறேன். சபையானது இந்த நேரத்தைக் கொண்டு வளர வேண்டியுள்ளது. ஆனால் மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டியவர்களாய் இருக்கும் நம்மில் அனேகர், இன்னுமாக வேதாகமமாகிய உத்தம பாலை வாஞ்சிக்கிறவர்களாயிருக்கிறோம். பாருங்கள்? நாம் போதகர்களாக இருக்க வேண்டியிருக்கும் போது, யாரோ ஒருவர் நமக்குப் போதிப்பது நமக்கு அவசியமாயுள்ளது. நான் அதைக் குறித்து அவமானத்தோடே என்னுடைய தலையைத் தாழ்த்துகிறேன், நான் அறிந்திருப்பதைக் காட்டிலும் எனக்கு தேவனைக் குறித்து அதிகம் தெரிந்திருக்க வேண்டும். 21. இப்பொழுது, இதோ நான் விசுவாசிக்கும் ஒரு காரியம் இருக்கிறது, ஒரு பிள்ளையானது... அங்கே மீண்டுமாக வேதாகமம் பேசுகிறது என்னவென்றால், அந்தப் பிள்ளையானது வளர்க்கப்படும்போது, அந்த உபாத்தியாயர் (tutor) அந்தப் பிள்ளையின் நடத்தையைக் குறித்து பிதாவிடம் தொடர்ந்து அறிவித்துக்கொண்டேயிருப்பார். இப்பொழுது, இந்தவிதத்தில், பெந்தெகோஸ்தேயினருக்கும் சபைக்கும் உபாத்தியாயர் (tutor) பரிசுத்த ஆவியானவராகத்தான் இருந்து வருகிறார்... ஐ அருளுகிற பரிசுத்த ஆவியானவர். மேலும் ஞாபகம் கொள்ளுங்கள், அந்தப் பிள்ளையானது, எப்பொழுதாவது என்ன நடந்திருந்தாலும் காரியமில்லை, அது ஒரு பிள்ளையாகப் பிறந்திருந்தது; அது எப்போதுமே ஒரு பிள்ளையாகத்தான் இருக்கும். ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் பிறக்கும்போது, அவன் தேவனுடைய ஒரு பிள்ளையாக ஆகிறான், அது உண்மையில் இரண்டாவது பிறப்பாக இருக்கிறது, ஒரு மறுபிறப்பு (regeneration), அது அந்த மனிதனுக்குள் அங்கே துவக்கமுதலே இல்லாத ஏதோவொன்றை உருவாக்குகிறது. ஒவ்வொரு மனிதனும் விசுவாச குடும்பத்தினனாகப் (household) பிறக்கும் போது, அவன் ஒரு பிள்ளையாக ஆகிறான். அதன்பிறகு பரிசுத்த ஆவியானவர் இந்த மனிதனைப் பின்தொடர்ந்து, அவன் எவ்வாறு முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறான் என்பதை தேவனிடம் கொண்டு வந்து சொல்லுகிறார். 22. இப்பொழுது, இந்தப் பிள்ளை... வயதை அடைந்த பிறகு. இப்பொழுது, அவன் இன்னும் ஒரு பிள்ளையாகத்தான் இருக்கிறான். ஆனால் அந்தப் பிள்ளையானது பொறுப்பற்றதாக இருந்து, ஒருக்காலும் எந்தக் கவனமும் செலுத்தாமல் இருந்து, பிதாவின் வேலையில் மிகவும் ஆர்வம் இல்லாமல் இருக்குமானால், அந்தப் பிள்ளை ஒருபோதும் அந்தக் குடும்பத்தின் சுவிகார புத்திரனாக மாட்டான். ஆனால் அவன் ஒரு சரியான பிள்ளையாகயும், ஒரு நல்ல பிள்ளையாகவும் இருந்து, தன்னுடைய தகப்பனின் வேலையில் பிரியமாயும், அதில் ஆர்வமாயும் இருந்து, தன்னுடைய தகப்பனின் வேலையை முன்னேற்றமடைய அவனால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பான் என்றால், அந்த உபாத்தியாயர் (tutor) அதைத் தகப்பனாரிடம் கொண்டு வந்து சொல்லுகிறார், அங்கே தான் அது குமாரனை ஸ்தானத்தில் பொருத்துதல் என்று அழைக்கப்பட்டது அல்லது பவுல் அதைக் கலாத்தியரில் கொடுப்பது போன்று, 'புத்திர சுவிகாரம்' என்று அழைக்கப்பட்டது. நாம் இயேசு கிறிஸ்து மூலமாக சுவிகார புத்திரராகும்படி முன்குறிக்கப்பட்டிருக்கிறோம், அதுதான் புத்திரசுவிகாரம். இப்பொழுது, ஒரு குடும்பத்தில் பிறந்த அதே குமாரன் தான் அதே குடும்பத்தில் சுவிகார புத்திரராக முடிந்தது, அல்லது அதே குடும்பத்தில் தான் ஸ்தானத்தில் பொருத்த முடிந்தது, அல்லது அவன் பிறந்த குடும்பத்திற்குள் ஒரு ஸ்தானம் அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அது இன்றைக்கு சபையின் மத்தியிலுள்ள பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று நான் நம்புகிறேன், அது சபையில் அப்போஸ்தலர்களையும், போதகர்களையும், தீர்க்கதரிசிகளையும், மற்றவர்களையும் ஸ்தானத்தில் பொருத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது... அநேக கள்ள அபாய அறிவிப்பொ¬களும் (false alarms) மற்றவைகளும் ஜனங்கள் மத்தியில் அசைந்து கொண்டிருக்கிறதை நாம் கண்டிருக்கிறோம், அது உண்மையான அசலான புத்திர சுவிகாரம் சமீபமாயுள்ளது என்பதை மாத்திரமே குறிப்பிடுகிறது. நான் அதை விசுவாசிக்கிறேன். தேவன் தான் சபைக்குள் ஸ்தானத்தில் பொருத்த வேண்டும். அது தேவனுடைய வேலை, மனிதனுடைய வேலை அல்ல. 23. இப்பொழுது, இந்தப்பையன் வயதை அடையும்போது, அப்போது அவனுடைய புத்திரசுவிகாரத்திற்கு அவன் ஆயத்தமாயிருக்கிறான், அவன் உபாத்தியாயர் (tutor) மூலமாக நிரூபிக்கப்பட்டிருந்தான், இந்தப் பையன் புத்திர சுவிகாரத்திற்குத் தகுதியுள்ளவன் என்று அந்த உபாத்தியாயர் பிதாவிடம் கூறியிருந்தார், அப்போது அவன் வெளியே ஒரு பொது இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான், அங்கே அவனுக்கு ஒரு-ஒரு அங்கி தரிப்பிக்கப்பட்டது (கனத்திற்குரிய ஒரு அங்கி, ஒருக்கால் ஊதா நிற அங்கி, அல்லது ஏதோவொரு ராயல்டி நிற அங்கியாக இருக்கலாம்), அவன் உட்கார வைக்கப்பட்டு, ஏறக்குறைய முழு பட்டணமும், ஜனங்கள் எல்லாரும் பிதா தன்னுடைய சொந்த குமாரனை அந்தக் குடும்பத்திற்குள் புத்திர சுவிகாரம் செய்வதைக் கண்டார்கள். பிறகு அவன் அந்தக் குடும்பத்திற்குள் புத்திரசுவிகாரம் செய்யப்பட்ட போது, அவன் ஏற்கனவே ஒரு குமாரன் தான், அவன் ஏற்கனவே ஒரு பிள்ளை தான், ஏற்கனவே கிருபைக்கு சுதந்தரவாளியாய் தான் இருக்கிறான், ஆனால் அந்தக் குடும்பத்தில் ஸ்தானத்தில் பொருத்தப்படுதல்... உங்களுக்கு அது புரிந்து விட்டது. இப்பொழுது, அவன் குடும்பத்தில் பொருத்தப்பட்டு, அவனுடைய ஸ்தானம் (அவனுக்குக்) கொடுக்கப்பட்ட போது, அவனுடைய தகப்பனின் பெயர் காசோலையில் இருப்பது எவ்வளவு நன்றாயிருக்கிறதோ அவ்வளவு நன்றாக அந்தப் பையனுடைய பெயரும் காசோலையில் இருக்கிறது. இப்பொழுது, சபையானது இன்று அந்த நேரத்தில் தான் வந்து சேர்ந்திருக்கிறது என்று நம்புகிறேன், அந்த கள்ள அபாய அறிவிப்புகளை (false alarms) நாம் கண்டபிறகு, சபையில் அடுத்த மகத்தான அசைவு, தேவனுக்கானதாக இருக்கிறது... ஆனால் இப்பொழுது, தேவன் சரியாக தம்முடைய சபைக்குள் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும், சுவிசேஷகர்களையும் ஸ்தானத்தில் பொருத்துவார், செயற்கையாக மனிதனால் உண்டாக்கப்பட்ட வேதாகம கல்லூரியால் வாங்கப்பட்டது அல்ல, ஆனால் தேவன் சபைக்குள் பொருத்துவார். வேதசாஸ்திர run-overs -களோ ஒரே இரவு மட்டும் நீடித்து இருப்பவைகளோ அல்ல, ஆனால் தேவன் தெரிந்தெடுத்து, பரிசுத்த ஆவியானவர் இந்த சபைக்குக் கற்பித்து அதை வளர்க்கையில், தேவனே சபைக்குள் பொருத்துவார். அங்கே உள்ளே, தேவன் தம்முடைய - தம்முடைய புத்திரர்களை அந்த ஸ்தானத்திற்குள் புத்திரசுவிகாரம் பண்ணுவார். அவர்கள் ஏற்கனவே அவருடைய குமாரர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர் அவர்களுக்காக வைத்திருக்கிற அந்த ஸ்தானத்துக்கு அவர்கள் தகுதியானவர்களா என்பது தான். 24. நீங்கள் ஒரு பரிபூரண முன்னடையாளத்தைக் கவனிப்பீர்களானால், தேவன் தம்முடைய சொந்த குமாரனையும் அதேவிதமாகவே செய்தார். அவர் ஒரு சாட்சியாக மூன்று பேரை அழைத்துச்சென்றார் (சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே நிலைவரப்படும்), பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவான்: அன்பு, விசுவாசம், நம்பிக்கை. அவர் மற்ற உலகத்தாரிடமிருந்து தனியாக, அவர்களை மேலே ஒரு மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அதிகாரப்பூர்வமான சாட்சிகளுக்கு முன்பாக, தேவன் தம்முடைய சொந்த குமாரனை புத்திரசுவிகாரம் செய்தார். அவர் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார், அவர் வஸ்திரம் சூரியனைப்போலப் பிரகாசித்தது. அப்போது மேகத்தி-ருந்து ஒரு சத்தம் உண்டாகி, 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவருக்குச் செவிகொடுங்கள்' என்றது. அவரை ஒரு மலையின்மேல் அமரவைத்து, அதைக் காண்பதற்கு அங்கே சாட்சிகளையும் வைத்து, சூரியன் பிரகாசிப்பது போன்று அவ்வளவு பிரகாசமான அங்கியால் அவரைத் தரிப்பித்தார், இதில்... அவர்களும் கூட சூரியனுடைய வல்லமையில் சூரியனைப் போன்று பிரகாசித்தார்கள். அப்போது தேவன், 'இவர் என்னுடைய நேச குமாரன்; இவருக்குச் செவிகொடுங்கள்' என்று உரத்த சத்தமாகப் பேசினார். தேவன் தம்முடைய சொந்த பிள்ளையை குடும்பத்திற்குள் புத்திரசுவிகாரம் பண்ணினார். 'இனி எனக்குச் செவிகொடுக்க வேண்டாம், ஆனால் இதுமுதற்கொண்டு என்னுடைய குமாரனாகிய இவரே அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறார்.' ஆமென். சபையினுடைய உவமையில், அந்த புத்திர சுவிகாரத்துக்கான நேரம் அருகாமையிலுள்ளது. அதற்கான நேரம் இதுவே. 25. இப்பொழுது, நாம் மறைக்கப்பட்ட ஜீவியத்திற்குத் திரும்பி வந்து, புத்திர சுவிகாரத்தின் இந்த ஸ்தானத்திற்குள் வருவதற்கு இதற்கு என்ன அவசியமாயிருக்கப் போகிறது என்பதைக் கண்டுபிடிப்போம். ஒரு மறைக்கப்பட்ட ஜீவியம், மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் கீழாக பழைய ஏற்பாட்டில் நாம் அதைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம், அங்கே நாம்... ஐக் கண்டுகொண்டோம். அங்கே வனாந்தரத்தில் தேவனுடைய கூடாரத்தின் கட்டமைப்பில் மூன்று, இரண்டு திரைகள், இரண்டு தடுக்கப்பட்ட இடங்களையும் (compartments), ஒரு ஆசரிப்பு கூடாரமும் (congregation) இருந்ததையும் எந்த வாசகரும் அறிவார்கள். முதலாவது ஆசரிப்பு கூடாரம், பிறகு பரிசுத்த ஸ்தலம், அதன்பிறகு மகா பரிசுத்த ஸ்தலம். அதுதான் தேவனுடைய வீடாகும்; அதுதான் தேவனுடைய வாசஸ்தலம். அதுதான் உங்களுடைய வாசஸ்தலமாகவும் இருக்கிறது. இப்பொழுது, நீங்கள் மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டில் மட்டுமே வசிக்கிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும். உங்களுக்கு இரண்டு படுக்கையறைகள் இருக்கலாம்; உங்களுக்கு மூன்று சமையலறைகள் இருக்கலாம், ஆனால் நீங்கள் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் மட்டுமே வசிக்கிறீர்கள். தேவனும் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் தான் வசித்தார். தேவன் இங்கே பூமியின் மேல் இருந்தபோது, அவர் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் குடியிருந்தார், இயேசு கிறிஸ்துவின் ஆத்துமா, சரீரம், மற்றும் ஆவி. 26. உலக சம்பந்தமான ஆலயத்தில், அவர் - அவர் ஒரு ஆசரிப்புக் கூடாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருந்தார். அவைகள் ஒவ்வொன்றுமே ஒன்று மற்றொன்றி¬ருந்து வேறு பிரிக்கப்பட்டிருந்தது, ஒவ்வொன்றுமே அந்த வாசம் பண்ணும் இடத்தைக் காண்பிக்கும்படியாக அதற்குள் வித்தியாசமான மரச்சாமான்களைக் கொண்டிருந்தது, சபையின் மிகவும் அழகான முன்னடையாளம். பாவி முதலாவது, அது இருந்தது போலவே, சமையலறைக்குள் வருகிறான்; சமையலறை, அங்கு தான் நீங்கள் புசிக்கிறீர்கள். முன்பக்க அறையில் (living room) நீங்கள் கூடிப்பேசுகிறீர்கள். படுக்கையறையில் தான் நீங்கள் இளைப்பாறுகிறீர்கள். ஓ, தேவனே. புரிகிறதா? பாவி உள்ளே வருகிறான்: 'விசுவாசம் கேள்வியினால் வருகிறது, வார்த்தையைக் கேட்பதினால் வருகிறது.' அவன் வந்து வார்த்தையைப் புசிக்கிறான். அதன்பிறகு அவன் அந்த விசுவாசத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறான், அப்போது தான் தேவனோடு உரையாடுவதற்காக (commune) அவனைக் கொண்டு வருகிறது. ஆனால் அதன்பிறகு அவன் தொடர்ந்து படுக்கையறைக்குள் போகிறான், அப்போது அவன் தேவனோடு சத்தமில்லாத அமைதியாய் இருக்கிறான், அங்கே உலகத்தின் காரியங்கள் எல்லாம் முழுமையாக தடுக்கப்பட்டு வெளியேயிருக்கின்றன, அவன் தேவனோடு அமைதியாக தனியாக இருக்கிறான். சகோதர, சகோதரிகளே, இன்று இந்த பெந்தெகோஸ்தேகாரர்கள் போக வேண்டிய இடம் அதுதான், 'நாங்கள் திரித்துவக்காரர்கள். நாங்கள் மெதோடிஸ்டுகள். நாங்கள் அசெம்பிளிஸ்காரர்கள். நாங்கள் சர்ச் ஆஃப் காட் காரர்கள்' என்று அதிகமாக அர்த்தமின்றி பேசுவதல்ல. நாம் தேவனோடே கூட ஆழ்ந்த அமைதியோடு தனியாக இருந்தாக வேண்டும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? நிச்சயமாக, நாம் அவ்விதமே இருந்தாக வேண்டும். 27. கவனியுங்கள், பிரதான ஆசாரியன் வருடத்திற்கு ஒருமுறை முதலாவது திரைக்குள்ளும், அதன்பிறகு இரண்டாவது திரைக்குள்ளும் பிரவேசித்த போது... வெளியே கொப்பரைகளில், அங்கே அவர்கள் பலி¬யைக் கழுவினார்கள், அதன்பிறகு பலி யானது கொல்லப்பட்டு, வெண்கல பலி¬பீடத்தின்மேல் வைக்கப்பட்டு, இரத்தமானது ஒரு தட்டில் (charger) வைக்கப்பட்டது, பிரதான ஆசாரியன் பரிகாரம் செய்வதற்காக வருடத்திற்கு ஒருமுறை திரைக்குப் பின்னால் உள்ளே நடந்து சென்றான்... இந்தப் பிரதான ஆசாரியனின் வஸ்திரத்தைக் கவனியுங்கள். அவனால் திரைக்குள் பிரவேசிக்கக்கூடும் முன்பு, அவன் உடுத்தினவைகளை அகற்றி விட்டு, உள்ளே போவதற்கு சரியாக உடுத்த வேண்டியிருந்தது. அவ்விதமாகவே சபையும் இன்றுள்ளது, அதற்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், இந்த சிறிய கோட்பாடுகளையும் மற்றும் காரியங்களையும் உரிந்து போட்டு விட்டு, இயேசு கிறிஸ்துவின் நீதியில் தரித்துக் கொண்டு, உள்ளே பிரவேசிக்க ஆயத்தமாயிருப்பது தான். அவனுடைய நடை வித்தியாசமாக இருந்தாக வேண்டும், ஒவ்வொரு... அவனுடைய வஸ்திரத்தின் ஓரத்தின் நெடுகிலும், அவன் ஒரு மாதுளம்பளத்தையும் அதன்பிறகு ஒரு மணியையும் கொண்டிருந்தான். அவன் நடக்கையில், அந்த மணிகள், 'பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்குப் பரிசுத்தம்' என்று ஒ¬க்கும் அளவுக்கு, அவனுடைய நடையானது மிகவும் பரிபூரணமாக இருந்தது. இன்று நமக்கு என்ன தேவையாயிருக்கிறது என்றால், நாம் அசெம்பிளிஸாக இருக்கிறோமா என்றோ, அல்லது சர்ச் ஆஃப் காட்டாக இருக்கிறோமா என்றோ, அல்லது ஒருத்துவக்காரராக இருக்கிறோமா என்றோ, அல்லது அது எதுவாகவும் இருகிறதோ அவ்விதமாக இருக்கிறோமா என்றோ அல்ல. நம்முடைய நடையானது பொது ஜனங்களுக்கு, 'பரிசுத்தம், பரிசுத்தம், கர்த்தருக்குப் பரிசுத்தம்' என்று ஒ¬த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது. 28. வேறொரு காரியம் என்னவென்றால், அவன் உள்ளே போவதற்கு முன்பு, அவன் அபிஷேகம் பண்ணப்பட வேண்டும். அந்த அபிஷேக எண்ணெயானது சாரோனின் ரோஜாவினாலே செய்யப்பட்டதாய் இருந்தது, அந்த ரோஜாவை நசுக்குவது தான் அந்த நறுமண தைலத்தைக் கொண்டு வந்தது, அவர்கள் அதை அந்த எண்ணெயின் மேல் வைத்து, ஆரோனின் தாடியின் மேல் வழிய விட்டார்கள், அது செங்குத்தாக அவனுடைய கீழ்வஸ்திரத்தின் (skirt) ஓரத்தில் வழிந்து, அவன் அந்த அபிஷேக எண்ணெயினால் முழுவதுமாக மூடப்பட்டு, சரியாக நடந்து, சரியாக ஜீவித்து, சரியாக சென்று, சரியாக வஸ்திரம் தரித்திருத்தான். அங்கே அவன் தனக்கு முன்பாக அந்த இரத்தத்தை எடுத்துக்கொண்டு சென்றான், அவன் மூன்றாம் அறைக்குள்ளிருக்கும் திரைக்குப் பின்னால் போகையில், அவனுக்குப் பின்பாக விழுந்த ஒரு திரை அங்கேயிருந்தது, அதற்கு மேலும் வெளிப்புற உலகம் அவனைக் காண முடியாதிருந்தது. எப்பொழுதாவது தேவனாலே அபிஷேகம் பண்ணப்பட்டு, அந்த ஆலயத்தின் பின்னால், தேவனுடைய திரைக்குப் பின்னால், பரிசுத்த ஆவிக்குப் பின்னால் நடக்கிற ஒவ்வொரு மனிதனும், அல்லது பையனும், அல்லது பெண்ணும், அல்லது சிறு பெண் பிள்ளையும், அது ஒரு இரகசிய ஸ்தலத்திற்குள் அவனை வைக்கிறது. அந்தத் திரையானது அவனுக்குப் பின்னால் விழ, உலகமும் அதனுடைய காரியங்கள் எல்லாம் அவனுக்குப் பின்னால் தடுக்கப்பட்டு விடும். 29. ஆகையால் தான் சகோதரர்களே, தேவனுடைய புத்திர சுவிகாரத்திற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம், நம்முடைய ஜீவியத்திலுள்ள வித்தியாச பேதங்களும், வம்புகளும், ஒருவருக்கொருவர் சண்டையிடுதலும் இருக்கையில், அதற்குக் காரணம் என்னவென்றால், நமக்கு பின்னால் திரை விழுந்து, தேவனுடைய பிரசன்னத்திற்குள் நம்மால் போக முடியாதிருப்பது தான் காரணம். அது சரியே. நாம் நம்முடைய ஸ்தாபனங்களில் தான் மிகவும் ஆர்வமாயிருக்கிறோம். அடுத்த மனிதன் எப்படியிருக்கிறான் என்பதில் தான் நாம் மிகவும் ஆர்வம் கொண்டிருக்கிறோம், என்ன... 'அதனால் உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றி வா.' அது ஒவ்வொரு ஊழியக்காரர்களுக்கிடையே உள்ள தனிப்பட்ட விவகாரமாக உள்ளது. எப்படியாக ஒரு ஊழியக்காரன், தான் ஜெபிப்பதற்கு முன்பாக, அவன் பிரசங்கம் பண்ணுவதற்கும் கூட முன்பாக, எப்போதுமே அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அவன் எதையும் செய்வதற்கு முன்பாக, அவன் அந்த அமைதியான இடத்தில் தேவனோடு கூட தனித்திருக்க வேண்டும், தேவனோடு மறைத்துக்கொள்ள வேண்டும். எப்படியாக அந்த, அந்தத் திரை ஒருமுறை கீழே விழ... 30. இப்பொழுது, இதிலுள்ள - மரச்சாமான்கள், இந்தத் திரைக்கு உள்ளே இருந்த மரச்சாமான்கள் வெளியி¬ருந்த மரச்சாமான்களி¬ருந்து வித்தியாசப்பட்டதாக இருந்தது. ஆசரிப்புக் (கூடாரத்தில்) பின்னால், மிருகத்தைக் கழுவின கொப்பரையானது... அடுத்த திரையில் என்ன இருந்தது? அது மிருகங்களின் சரீரங்களை சுட்டெரிப்பதாக இருந்தது. அங்கே உள்ளே ஏழு பொன் குத்துவிளக்குகள் இருந்தன, அவை விளக்கை பிரதிநிதித்துவப்படுத்தினதின் பேரில் இருந்து, வெளிச்சத்தைக் கொடுத்தன. புறம்பேயிருந்த வெளிப்பிரகாரத்தில் சூரிய வெளிச்சம் இருந்தது. முதலாவது திரையானது செயற்கையானதாக இருந்தது. கவனியுங்கள், அவர்கள் இந்த விளக்கின் மூலமாக, இங்கே உள்ளே நடந்து வந்தபோது, அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாய் அங்கே உள்ளே நடந்து வருகையில், அவர்கள் அடுத்த பிரகாரத்திற்குள் போனார்கள், அது மகா பரிசுத்த ஸ்தலமாக இருந்தது. தேவன் எப்படியாக அதை மிகவும் முழுமையாக திட்டமிட்டு செய்திருக்கிறார்; தேவனுடைய நித்திய இரட்சிப்பைக் குறித்து அங்கேயிருக்கும் அந்த மகத்தான திட்டத்தை நாம் காண்கையில், அது நமக்கு அப்படிப்பட்டதொரு அழகான காரியமாக இருக்கிறது. அவருடைய ஊழியக்காரர்கள் எப்படியாக இதற்குள் நடக்க வேண்டும். இதற்குள் பிரவேசிக்கும்படியாக அவர்கள் எப்படியாக தங்களைத்தாங்களே ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். 31. இப்பொழுது, இந்த உட்பிரகாரத்திற்கு உள்ளே - மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்பட்டது, அங்கே இரக்கத்தின் சிங்காசனம் என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு பகுதி மரச்சாமான்கள் அங்கே இருந்தது. அந்த உடன்படிக்கையோ பேழைக்குள் இருந்தது. அந்தப் பேழையானது இரண்டு கேருபீன்களைக் கொண்டிருந்தது. அது உள்ளே இருந்தது. அது பரிசுத்த ஸ்தலத்திற்கு உள்ளேயிருந்த மரச்சாமானாக இருந்தது. அடுத்தது வெளியே வருவது பொன் குத்துவிளக்குகளாக இருந்தன, அதன்பிறகு வெளியே கொப்பரைக்கு வருகிறோம். இப்பொழுது, அது லூத்தரின் காலத்தையும், வெஸ்¬யின் காலத்தையும், பெந்தெகோஸ்தேயினரின் காலத்தையும் பரிபூரணமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது, சரியாக, மனுக்குலத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய கிருபையின் மூன்று கட்டங்கள் அல்லது மூன்று யுகங்கள். நாம் கடைசி யுகத்தில் இருக்கிறோம். நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? 32. இப்பொழுது, கவனியுங்கள், அதன்பிறகு மேலும் இந்த மகத்தான அசைவில், தேவன் எப்படியாக அவர்களை இந்த மகத்தான இடத்தில் அங்கே உள்ளே கொண்டு வந்திருந்தார். மன்னா பொழிய ஆரம்பித்தபோது, ஒரு சமயம் தேவனாலே மோசேயிடம் கூறப்பட்டது, மன்னா என்பது ஜீவனுக்கு ஒரு முன்னடையாளமாக இருந்தது: கிறிஸ்து வானத்தி¬ருந்து இறங்கி வந்து, இங்கே பூமியின் மேல் மரித்துக் கொண்டிருந்தார், அவர் நமக்கு ஜீவனைக் கொடுக்கிறார். அந்த மன்னாவானது வானத்தி¬ருந்து வந்து, பூமியின்மேல் விழுந்தது, ஜனங்கள் ஜீவனோடு காக்கப்படுவதற்காக அதைப் புசித்தனர். கிறிஸ்து வானத்தி¬ருந்து இறங்கிவந்து, நாம் அவர் மூலமாக ஜீவிக்கும்படியான மன்னாவாக ஆனார். இப்பொழுது கவனியுங்கள், ஜனங்கள் அந்த மன்னாவைப் புசித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் அதைத் துரிதமாகப் பெற்று, அதைப் புசிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் சூரியன் உதிக்கும்போது, அது அழிந்த போவது மட்டுமாக அது நீடித்து இருக்கவில்லை, அங்கே கிறிஸ்துவைக்குறித்த முன்னடையாளம், பரிசுத்த ஆவி. மன்னாவானது இன்றுள்ள பரிசுத்த ஆவிக்கு ஒரு முன்னடையாளமாயிருந்தது. தேவன் சபையை இயற்கையான மன்னாவைக் கொண்டு இயற்கையில் கொண்டு வருகையில், அவர் இன்று ஆவிக்குரிய மன்னாவைக் கொண்டு சபையை ஆவிக்குரியதாகக் கொண்டு வருகிறார். முத¬ல் சபையானது ஜெயங்கொண்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகில் வந்தபோது, அது இரத்தத்தின் முன்னடையாளமாக இருந்தது, அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிய பாதையில் பிரயாணப்பட்டுக் கடந்து வந்தபோது, முதலாவது இரவிலேயே மன்னா பொழிந்தது. ஆமென். சபையானது பெந்தெகோஸ்தே நாளில், ஜீவனை விட்டு மரணத்தை நோக்கி கடந்து சென்ற போது, தேவன் வானத்தி¬ருந்து ஆவிக்குரிய மன்னாவைப் பொழிந்தருளினார், இயேசு மறுபடியும் வருவது வரையிலோ அல்லது நாம் ஆயிரவருட அரசாட்சிக்கு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குக் கடந்து போவது மட்டுமாக, அது சபையைத் தொடர்ந்து ஜீவிக்கவைத்தது. ஆமென். 33. ஓ, அவர்கள் அதை எடுத்து, புசித்த போது, அது இனிப்பாக இருந்ததாக அவர்கள் கூறினார்கள். 'அது கன்மலையிலுள்ள தேனைப்போன்று ருசியாயிருக்கிறது' என்று அவர்கள் கூறினார்கள். தேனைப் போன்ற ருசி. அது கன்மலையிலுள்ள தேன் என்று தாவீது அதை அழைத்தான், அவ்வாறு தான் அது இருக்கிறது. இப்பொழுது, ஒரு முன்னடையாளத்தைக் கவனியுங்கள். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்கும் நாள் மட்டுமாக அந்த மன்னா பொழிவது ஒருபோதும் நிற்கவில்லை; நாற்பது வருடங்களாக அதே மன்னா ஒவ்வொரு நாளும் பொழிந்தது. அல்லேலூயா! சகோதரனே, நீ எப்படி பரிசுத்த ஆவியை எடுத்துக்கொண்டு, அதை பெந்தெகோஸ்தேயில் விட்டு விடப்போகிறாய், அது பெந்தெகோஸ்தேயைத் தொடர்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது. மனிதனுடைய இருதயக் கடினத்தின் நிமித்தமாக, மன்னாவைப் புசிக்கத் தவறி விட்டிருக்கிறோம்... அது சரியே. 34. கவனியுங்கள், அப்போது அது ஒரு முன்னடையாளமாக இருந்தது. இப்பொழுது, பெந்தெகோஸ்தே நாளில், நம்முடைய மன்னா... ஜனங்கள் மேலறைக்குள் போய், கர்த்தராகிய இயேசுவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து, முதல்முறையாக பரிசுத்த ஆவி வருவதற்காக எதிர்பார்த்து, அவர்கள் எருசலேம் பட்டணத்தில் காத்துக்கொண்டிருந்த உடனேயே, பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்தி¬ருந்து ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வார்த்தையின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அவர்கள் வெளியே வீதிகளுக்குச் சென்றார்கள், அவர்கள் ஒரு மேலறையில் மறைந்துகொண்டு இருந்த கோழைத்தனமான ஒரு சிறுகூட்ட பிரசங்கிமார்களாய் இருந்தார்கள். ஆனால் திடீரென்று அங்கே அந்த மன்னா வந்து, அவர்களுடைய ஆத்துமாக்களை ஜீவனோடு காத்துக்கொள்வதற்கு அது கீழே ஊற்றப்பட்டது. அவர்கள் வெளியே தெருக்களில் ஒரு அனுபவத்தோடு சென்றார்கள், அவர்கள் அதை அதற்கு முன்பு ஒருபோதும் கொண்டிருக்கவில்லை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குப் போகும் இந்தப் பயணம் வழியாக தேவன் தம்முடைய சபையை எடுத்துக்கொண்டு போவதைக் குறித்த ஒரு அழகான முன்னடையாளம். 35. கவனியுங்கள், சகோதரர்களே. அப்போது இந்த மன்னா எவ்வளவு காலம் தொடர்ந்து இருந்தது (last)? அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் (போகும்) வேறொரு யுகத்தை அடையும் மட்டுமாக, அது பிரயாணம் முழுவதும் தொடர்ந்து நீடித்தது. இது எவ்வளவு காலம் தொடர்ந்து நீடிக்கும்? இயேசு வரும்வரையில். பேதுரு, 'நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள், வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது' என்றான். அது எவ்வளவு காலம் தொடர்ந்து நீடித்தது? நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் யாவருக்கும். கிருபையின் யுகம் நீடித்திருக்கும் காலம் வரையில், தேவன் இன்னுமாக தமது சேவைக்காக மனிதரையும் ஸ்திரீகளையும் அழைப்பார். எனவே பரிசுத்த ஆவி உண்மையாகவே அப்படியே இன்றும் உள்ளது. இப்பொழுது, அவர் ஒருபோதும் கூறவில்லை... இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், அவர்கள் இந்த மன்னாவைப் புசிக்கும்போது, அவர்கள் அதைப் புசிப்பார்களானால்... அநேக ஜனங்கள் அதைப் புசித்துவிட்டு, 'இதுதான் அது' என்று கூறினார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அதைப் புதிதாக சேகரிக்க வேண்டியிருந்தது. அது சரியே. அவர்கள் அந்த மன்னாவை ஒவ்வொரு நாளும் புதிதாக சேகரிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் ஏறக்குறைய ஒன்பது மணியளவில் அவைகளுடைய இரண்டாவது கட்டத்தில் அது உருகிப்போய்விடும். அது அழிந்து போய் விடுவதாக இருந்தது. 36. அநேக நேரங்களில் ஜனங்கள் தேவனுடைய இரண்டாவது அறையில் ஜீவிக்கிறார்கள், இராப்போஜனத்தில் கூட, அவர்கள் ஏற்கனவே வார்த்தையைப் பெற்று, தங்களுடைய ஜீவியங்களுக்குள் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வதன் இரண்டாவது படிக்குள் வந்தும், இன்னுமாக அந்த இரகசிய அறை என்னவென்றும், அந்த படுக்கையறை என்னவென்றும், அந்த இளைப்பாறும் இடம் என்னவென்றும் ஒருபோதும் அறியாமல் இருந்தும், அவர்கள் அந்த மன்னாவைப் புசிக்கிறார்கள். ஆனால் நீங்கள் கவனித்தீர்களா, அவர்கள் அதை மிக நீண்ட நேரம் வைத்திருக்க விடுவார்களானால், அது முடிவில் உருகிப்போய் விட்டது (melted out). அங்கே... அது-அது அழிந்து போனது (perished away). நிறைய ஜனங்கள் எப்படியும் பாளயமிறங்கும் இடத்திலுள்ள வ¬யை அதிகம் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், அவர்கள் போய், பாளயமிறங்கும் இடத்தில் கர்த்தரைக் குறித்துப் புசித்து, வேறொரு எழுப்புதல் வரக்கூடும் முன்பே, அவர்கள் எல்லாரும் திரும்பிச் சென்று, ஏதோவொரு விதமான சமய கோட்பாடுகளுக்கோ அல்லது வேறு ஏதோவொன்றுக்குள் தாறுமாறாக்கப்பட்டு தவறான வழியில் திரும்பி விடுகிறார்கள். சகோதரனே, என்ன காரியம், நீங்கள் ஒருபோதும் வேறு எங்கோ நடந்திருக்கவேயில்லை. 37. தேவன், 'மோசே, உனக்கு ஒரு பொற்பாத்திரத்தை (golden pot) உண்டுபண்ணு' என்றார். அல்லேலூயா! அங்கே உள்ளே இந்த மன்னா வைக்கப்பட்டது. மேலும் ஞாபகம் கொள்ளுங்கள், ஒரு விசுவாசி, அவன் அங்கே உள்ளே நடந்து சென்ற போது, அந்த மன்னா ஒருபோதும் வெறுமையாய் போகவில்லை. நாட்களோ வருடங்களோ கடந்து போகையிலும், அது எப்போதுமே புத்தம்புதியதாகவும் இனிமையாகவும் இருந்தது. கிறிஸ்துவிடம் வந்து, மறைந்து கொண்டு, அவனுக்குப் பின்னால் திரை விழுகிற எந்த மனிதனும், அவன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்தில் இருந்து, இரவும் பகலும், வேளைக்கு வேளை அந்த மன்னாவைப் புசித்துக் கொண்டிருக்கிறான். அது எப்போதுமே முதலாவது நாள் உங்கள் ஆத்துமாவிடம் கூறப்பட்ட போது, இருந்தது போன்றே அது அவ்வளவு இனிமையாக உள்ளது. நமக்கு இன்று அதுதான் அவசியமாயுள்ளது, அந்தக் காரியங்கள் இருக்கிற இடத்திற்குள் வருவது, தூரத்தில் நிற்பதோ, பாசாங்கு செய்து நடிப்பதோ, அல்லது தொலைவில் நின்றுகொண்டு நடந்துகொள்வதோ அல்ல, ஆனால் உண்மையில் அங்கே உள்ளே செல்லுதல். ஆமென். ஒருமுறை அந்த மனிதன்... 38. விசுவாசிகள் மாத்திரம், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மாத்திரம் அதற்குள் வருகிறார்கள் என்பது இப்பொழுது நினைவிருக்கட்டும், தேவன் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷம் 2-ம் அதிகாரத்தில், 'ஜெயங்கொள்ளுகிறவன்' என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். எனவே அது ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. நீங்கள், 'புகைப்பிடித்தலை நான் வென்றுவிட்டேன்' என்று கூறினீர்கள். அவர் அதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கவில்லை. கிறிஸ்தவத்தை நோக்கிப் போகிற இன்னும் ஏராளமானோர் சிகரெட்டுகள் புகைக்காமலும், அல்லது சாராயம் குடிக்காமலும் கூட இருக்கிறார்கள். 'ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; அவன் என் குமாரனாயிருப்பான்; நான் அவன் தேவனாயிருப்பேன், மேலும் (கவனியுங்கள்) நான் அவனுக்கு மறைவான மன்னாவைக் கொடுப்பேன். (ஆமென்.) நான் அவனை மறைத்துக் கொள்ளுவேன், திரைக்கு வெளியே உள்ள உலகமானது அதைக் குறித்து எதையுமே அறிந்திராத மறைவான காரியங்களை நான் அவனுக்குக் கொடுப்பேன்.' அல்லேலுயா! அவர்கள் மன்னாவைப் புசிக்கிற போதிலும், ஆனால் அவர்கள் அதைக் குறித்து அறிந்து கொள்வதில்லை. 'நான் மறைவான மன்னாவை அவனுக்குக் கொடுப்பேன். நான் ஒரு கல்¬ன்மேல் உள்ள அவனுடைய பெயரைக் கொண்ட ஒரு கல்லை அவனுக்குக் கொடுப்பேன்.' நான் என்ன கூறக் கருதுகிறேன் என்பதை புரிந்து கொள்கிறீர்கள்: அந்த புத்திர சுவிகாரத்திற்குள் அல்லது தேவனோடுள்ள மறைவான இடத்திற்குள் பிரவேசித்தல். 39. சுவிஷேத்தின் ஊழியக்காரர்கள்; உங்களுடைய ஸ்தாபனங்களைக் குறித்தும் உலகம் என்ன நினைக்கிறது என்பதைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம், ஆனால் உங்கள் இருதயத்தில் அன்பைப் பூரணப்படுத்தும் தேவனுடைய முழு வெளிப்பாடு இருக்கும் மறைவான மன்னாவுக்குள் பிரவேசிக்கவே தேடுங்கள், அப்போது நீங்களும் தேவனும் மற்ற எல்லாமே இளைப்பாறிக் கொண்டிருக்கும். எதுவும் வரட்டும், என்னவாகவும் இருக்கட்டும், நீங்கள் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஜீவிக்கும்படியான என்னவொரு இடம். ஓ, நான் அங்கே தங்கியிருக்கட்டும். 'நான் மரத்தின் கீழே இளைப்பாறட்டும், அங்கே இலவசமாய் பாய்கிறது, அங்கே ஆட்டுக்குட்டியானவரே வெளிச்சம், அங்கே இரட்சிக்கப்பட்டவர்களின் ஆத்துமா ஒருபோதும் மரிப்பதில்லை' என்று அந்தப் பாடல் கூறுவது போன்று. ஆமென். 40. அவர்கள் நிச்சயமாகவே அங்கே வெளியே மன்னாவைப் புசிக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு அதைக் குறித்து தெரியவில்லை. அவர்கள் ஒருபோதும் அங்கே உள்ளே இருந்திருக்கவில்லை. எனது அன்பு சகோதரனே, நீங்கள் அங்கு உள்ளே இருந்திருக்கிறீர்களா? என்னுடைய அறியாமையை இழிவாகக் கருத வேண்டாம், ஆனால் நான் ஒரு காரியத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் சபையைக் குறித்து செய்யக் கூடிய எல்லா வாக்குவாதங்களையும் காட்டிலும் கிறிஸ்து உங்களுக்கு இன்னும் அதிகமாக அர்த்தமுள்ளதாக இருக்கும் ஜீவியத்தின் இடத்திற்கு நீங்கள் எப்பொழுதாகிலும் வந்திருக்கிறீர்களா? உலகம் எல்லாவற்றைக் காட்டிலும் கிறிஸ்து உங்களுக்கு இன்னும் அதிகமாக அர்த்தமுள்ளவராக இருக்கிறாரா? ஒரு உணர்ச்சிவசப்படுத¬¬ருந்தோ அல்லது ஒரு மனரீதியாக ஒருவரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுத¬¬ருந்தோ நான் அதை அர்த்தப்படுத்தவில்லை; அங்கே உள்ளே அமைதலோடிருக்கும் ஏதோவொன்று உங்கள் இருதயத்தின் ஆழத்தி¬ருந்து வருவதையே நான் அர்த்தப்படுத்துகிறேன், ஏதோவொன்று சம்பவித்திருக்கிறது என்பதை, அது எப்படி வருகிறது என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுடைய நோக்கம் முழுவதும் இயேசு கிறிஸ்துவுக்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் இருக்கிறது. எனது அன்பு சகோதரனே, நீங்கள் அந்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்திருக்கிறீர்களா? யாராவது என்ன சொல்லுகிறார்கள் என்று நீங்கள் கவலைப்படாமல், வெளியே சென்று புத்திசா¬யாக நீங்கள் நடந்து கொள்ளாமல் இருந்து, ஆனால் தேவனுடைய அன்பானது உங்களுக்குள் மிகவுமாக நங்கூரமிடப்பட்டு, நீங்கள் வேறு எதையுமே காண முடியாமல், உங்களுடைய முழு நோக்கமும் தேவனுடைய சித்தத்தைச் செய்து, எல்லாரையும் அன்புசெய்து, எல்லாவிடங்களி¬ருந்தும் சுயாதீனமாக பொங்கி வழிந்து கொண்டுமிருக்கும் அளவுக்கு அந்த ஸ்தலத்திற்குள் நீங்கள் வந்திருக்கிறீர்களா? ஜீவிக்கும்படியான என்னவொரு இடம். அதுதான் அந்த மறைவான இடம். எனது சகோதரனே, நாம் வர வேண்டிய இடம் அதுவே. தேவன் தம்முடைய இரகசிய காரியங்களை வெளிப்படுத்தும் இடம் அதுதான். ஸ்தானத்தில் பொருத்துவதையும் அழைப்பதையும் தேவன் செய்கிற இடம் அதுதான். நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா? 41. இந்த இதே இடத்தில்... நமக்கு அதிக நேரமில்லை, ஏனென்றால் நான் துரிதப்பட வேண்டும், ஆனால் வெறுமனே வேறொரு சிந்தனைக்காக. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் யாரென்றும், அவரால் யார் தெரிந்து கொள்ளப்படவில்லை என்ற தீர்மானத்தைச் செய்யும்படியாக, இந்த இதே இடத்தில், அவர்கள் ஆரோனுடைய கோலை வைத்தார்கள். மரித்துப்போன கோலாயிருந்த அந்தக் கோலானது, ஒரே இரவில் ஜீவனுக்கு வந்து, துளிர்விட்டு, பூ பூத்து, வாதுமை பருப்புகளை கொடுத்தது. அது இரண்டு காரியங்களையும் அடைந்தது, ஜீவனை அடைந்து, பூ பூத்து, கனிகளையும் கொடுத்தது, பாவி தேவனிடம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டு வரப்படுவதைக் குறித்த மிகவும் குறிப்பிடத்தக்க மாதிரி. அந்தக் கோலானது அந்த மற்ற பகுதிகள் எல்லாவற்றையும் கடந்து போனது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், அது பரிசுத்த ஸ்தலத்துக்கு உள்ளே போனாலும், இன்னுமாக அது மரித்து தான் இருந்தது. ஆனால் தங்கியிருப்பதற்கு... அவர்கள் அதை முத-ல் அங்கே உள்ளே கொண்டு வந்தபோது, அது ஒருபோதும் ஜீவனை அடையவில்லை. ஆகையால் தான் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டது முதற்கொண்டு பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கவனித்திருக்கிறார், அவருடைய இராஜ்யத்தை நோக்கிய உங்கள் மனப்பான்மையைப் பாருங்கள். அது சுயநலமான நோக்கமாக இருந்தாலோ, தூரத்தி¬ருக்கிற ஒரு ஸ்தாபனத்தைக் குறித்து நீங்கள் நினைத்திருக்கிற காரியங்கள் இருந்தாலோ, அல்லது அது தூரமாக செய்யப்பட்டுக் கொண்டிருந்தாலோ, அது உங்களை, உங்களுடைய நிலையை மேம்பட்டதாகச் (செய்து), உலகத்தைத் தேடின ஒரு மனிதனாக அது உங்களை ஆக்க வேண்டியதாக இருந்து, அது உங்களுக்கு ஒரு பெரிய சபையை எங்கோ ஓரிடத்தில் கட்டுவதற்கோ, அல்லது ஏதோவொரு புகழைக் (கொண்டிருப்பதற்கோ), அல்லது மிகுதியாகப் பெருகுவதற்கு அப்பால் மற்ற ஏதோவொரு காரியத்தையோ, அல்லது தேவனுடைய இராஜ்யத்திற்கு மிகவும் உபயோகமாய் இருப்பதற்கு அப்பாலுள்ள மற்ற ஏதோவொரு காரியத்தையோ (கொண்டிருக்குமானால்), ஏதோ தவறாயுள்ளது, சகோதரனே. ஆமென். 42. இப்பொழுது, அந்தப் பழைய மரித்துப்போன கோல் அங்கே உள்ளே கொண்டு வரப்பட்டு, தேவனுடைய பிரசன்னத்திற்குள் தாமே வைக்கப்பட்ட போது, என்ன சம்பவித்தது? அது துளிர்த்து, பூ பூத்து, கனிகொடுத்தது, நாம்... உள்ளே பிறந்திருக்கிறோம் என்பதைக் காண்பித்தது. அந்த கோலானது வாதுமை மரத்தி¬ருந்து தூரத்தில் இருந்து, அது வெட்டி எடுக்கப்பட்ட போது, அது மரித்தது. மனிதன் தேவனிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட போது, அவன் ஆவிக்குரியபிரகாரமாக மரித்துப் போய் விட்டான். ஆனால் தேவனுடைய ஸ்தலத்திற்குள் ஒருமுறை கொண்டு வரப்படட்டும், தேவனுடைய பிரசன்னத்திற்கு முன்பாக, அவன் ஜீவனை அடைந்து, அவன் ஜீவனைக் கொடுக்கிறான். அவன் பூக்களை மலரச் செய்கிறான். அவன் கனி கொடுக்கிறான். அந்த மரத்தின்மேல் கனி இருக்கிறதா என்று தேடிப்பார்க்க இயேசு மரத்தினிடம் வந்தார். அதனிடம் கனியைத்தவிர எல்லாமே இருந்தது, இன்று நம்முடைய சபையோடுள்ள காரியமும் அதுதான், நாம் கனியைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம். நம்மால் சத்தமிட முடியும்; நம்மால் அந்நிய பாஷைகளில் பேச முடியும்; நாம் வேதவாக்கியங்களைக் குறித்து விவாதம் செய்ய முடியும்; நம்மால் நமது வேதசாஸ்திரத்தை போதிக்க முடியும், ஆனால் கனிகொடுக்கும்படி அது வரும்போது, அந்த மரமானது மிகவும் கெட்டதாக இருக்கிறது. ஆவியின் கனிகள் என்பவை என்ன? அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், அமைதி. அநேகர் முதலாவது ப¬பீடத்திற்கு வெளியே தான் இன்னும் இருக்கிறார்கள் என்பதையே அது காட்டுகிறது. நீங்கள் இன்னுமாக பொது ஜனங்களுக்கு திறந்த நிலையில் தான் இருக்கிறீர்கள். ஜான் அதைக் குறித்து என்ன கூற வேண்டும் என்பதையோ, அண்டை வீட்டார் என்ன நினைப்பார்கள் என்பதையோ, அல்லது உங்களுக்காகவே ஏதோவொன்றையோ கேட்கும்படியாக இன்னும் நீங்கள் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஒருமுறை திரைக்குப் பின்னால் (போய்), திரைச்சீலைகள் விழும்போது, நீங்கள் கிறிஸ்துவின் வழியாக தேவனுக்குள் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள். பாருங்கள்? 43. கவனியுங்கள், தேவனுடைய பிரசன்னத்திற்குள் இருக்கிற பாவியைப் பற்றிய என்னவொரு அழகான காட்சி. இப்பொழுது, இந்தக் கோலானது அங்கே வைக்கப்பட்டிருந்து, அது புத்துயிரடைந்தது. அது நறுமணமுள்ளதாக இருந்து, அந்த மலருடைய வாசனைக் கொண்டு வரப்பட்டு, கனியைக் கொடுத்தது. அது துளிர்விட்டது. இப்பொழுது, பூமிக்குரிய பிரகாரமாக பேசப்பட்ட அதைக் குறித்த ஒரு அழகான முன்னடையாளம். நாம் ஒரு விளைச்சலைக் கொண்டிருக்கக் கூடியதற்கு முன்பு, நாம் செய்ய வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால், நாம் விதையைக் கொண்டிருக்க வேண்டும். நிலத்திற்குள் புதைக்கப்பட்ட விதை தான் அதனுடைய கனியைப் பிறப்பிக்கும். அது சரிதானா? இப்பொழுது, நாம் செய்ய வேண்டிய முதலாவது காரியம் என்னவென்றால், கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வதாகும். இப்பொழுது, அந்த மரமானது துவக்கத்திலேயே ஒரு வாதுமை மரமாக இருக்க வேண்டியிருந்தது. மேலும் கிறிஸ்துவும், நீங்கள் இந்த இடத்திற்குள் வருவதற்கு முன்பாக, நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இம்மகத்தான தேவனுடைய பிரசன்னத்தில், இக்காரியங்கள் சம்பவிக்கிறது. என்ன... வார்த்தையைப் பாருங்கள், கிறிஸ்துவே வார்த்தையாக இருந்தார். 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.' மனிதனுடைய ஜீவியத்திற்குள் கிறிஸ்து வருகிறார். 44. இப்பொழுது, கவனியுங்கள், முதலாவது காரியம் என்னவென்றால் புத்துணர்ச்சியாக இருந்தது தான். அந்த விதையை எது வளரச் செய்கிறது? நீங்கள் எப்பொழுதாவது காலையில் எழுந்து, வானத்தி¬ருந்து கீழே விழுந்து, பூமியைப் புதுப்பிக்கும் பனித்துளியைப் பார்த்ததுண்டா? அது எப்படி அதைப் புதுப்பிக்கிறது? அது அமைதியாக இருக்கும்போது தான். பனித்துளிகள் பகல் ரேநத்தில் விழுவதில்லை. எல்லாமே அமைதியாக இருக்கும் போது, பனித்துளிகள் இரவு நேரத்தில் தான் விழுகிறது. என்னுடைய சகோதரனே, நீங்கள் பயங்கரமாக சண்டையிட்டுக்கொண்டும், வாக்குவாதம் செய்துகொண்டும், இங்கே இந்த பூமியின் மேலுள்ள காரியங்களைக் குறித்து பதட்டமடைந்து கொண்டும் இருக்கும் காலம் வரையில், பனித்துளிகள் ஒருபோதும் உங்கள் மேல் விழ முடியாது. தேவனோடு தனிமையாக வாருங்கள், இரக்கத்தின் பனித்துளிகள் அமைதியாக இருக்கும் உங்கள்மேல் விழட்டும். விலையேறப்பெற்ற நினைவுகள், எப்படியாக அவைகள் தங்குகின்றன, அவைகள் எப்பொழுதும் எப்படியாக எனது ஆத்துமாவை நிரப்புகின்றன; நள்ளிரவின் அமைதியில், இரகசியங்கள் திறக்கப்படுகின்றன. தேவன் எப்படியாக தம்முடைய விசுவாசியை தானாகவே தனிமையாக இருக்கும் அவனைச் சுற்றிலும் விழுகிற திரைச்சீலையோடு பெற்றுக்கொள்ள முடிகிறது, அவர் வானத்தி¬ருந்து வரும் புத்துணர்ச்சியைக் கீழே கொண்டு வருவார், அங்கே வேறெந்த நபரும் கிடையாது, அல்லது உலகத்தில் அதை எப்பொழுதாவது அறிந்து கொள்வதற்கு வேறு வழியே கிடையாது, அங்கேயிருப்பது அவன் மாத்திரமே. 45. நீங்கள் எப்பொழுதாவது காலையில் அந்த உண்மையான புத்துணர்ச்சியில், சில்லென்ற உணர்ச்சியோடு வெளியே நடந்திருக்கிறீர்களா? தேவன் தமது பூமியை புத்துணர்ச்சியாக்கியிருக்கிறார். நறுமணம், நீங்கள் எப்பொழுதாவது ஒரு ரோஜா மலர் தோட்டத்திற்குள் போயிருக்கிறீர்களா? என்னுடைய இடத்தில், அவர்கள் நிறைய ஒரேவிதமான செடிகளைப் (honeysuckles) பெற்றிருக்கிறார்கள். அந்த ஒரேவிதமான செடிகள் பக¬ன் உஷ்ணத்தில் அதிகமாக நெடுகிலும் வாசனை வீசுவதில்லை. ஆனால் அதிகாலையில், எல்லா காற்றும் சுத்தமாக இருக்கும் போது தான் அதில் வாசனை வீசுகிறது, அதன்பிறகு அந்த ஒரேவிதமான செடிகளுடைய அந்த நறுமணம்... ஒரு மனிதன் வெளியி¬ருந்து வம்பு செய்துகொண்டும், சண்டையிட்டுக் கொண்டும், பதட்டமடைந்து கொண்டும் இருக்கட்டும், அப்போது நீங்கள் சுவிசேஷத்தைக் குறித்து அதி¬ருந்து ஒருபோதும் அதிக நறுமணத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள், ஆனால் அவன் ஒருவிசை தேவனுடைய அமைதிக்குள் தனிமையாக வரட்டும். பிரசங்க பீடத்திற்கு வருகிற ஒவ்வொரு மனிதனும் முத¬ல் தனிமையில் வாசம் செய்தாக வேண்டும். அதன்பிறகு கனிகள் வருகின்றன, அது அதனுடைய கனிகளைக் கொடுக்கின்றது. தேவனுடைய பிரசன்னத்தில், இந்த மகத்தான இரகசிய இடத்தில் தங்கியிருந்து, மறைந்து கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் சமாதானம், அன்பு, சந்தோஷம், நீடிய பொறுமை, நற்குணம், தயவு, அமைதியாகிய நீதியின் கனிகளைக் கொடுப்பான். இந்த மற்ற காரியங்களைக் குறித்து முறையிட வேண்டாம். உங்களுடைய ஜீவியத்தில் அதைப் பெற்றுக்கொள்ளுங்கள், புத்திர சுவிகாரத்தின் அந்த தேசத்திற்குள் நீங்கள் தேவனோடு மறைந்து கொள்ளும் மட்டுமாக நீங்கள் ஒருபோதும் அதைப் பெற்றுக்கொள்ளவே மாட்டீர்கள். 46. வேறொரு காரியம் என்னவென்றால், நாம் முடிப்பதற்கு சற்று முன்பாக, உங்களுடைய கவனத்தைக் கோருவோம். அந்த வெளிச்சத்தைப் பாருங்கள், வெளியே பிராகாரங்களில், அது அதை ஒளிரச்செய்யும் வானமாக (ஆகாய விரிவாக) இருந்தது, அது சூரிய வெளிச்சமாகவும், மற்றவைகளாகவும் இருந்தது. சில நாட்கள் மேகமூட்டமாக இருந்தது; சில நாட்கள் சூரியன் பிரகாசிக்கவேயில்லை. சில நாட்கள், அது இருளாக இருந்தது. இப்பொழுது, அது வெளிப்பிராகாரத்தில் இருந்தது. அடுத்த பிராகாரமானது தேவனுடைய விளக்காக இருந்தது, அங்கே நீதிமானாக்கப்பட்டவர்கள் நிற்கிறார்கள், அது மனித கரங்களினால் ஒளியேற்றப்பட்டது. அங்கேதான் நாம் நம்முடைய ஸ்தாபனங்களைக் குறித்து வாக்குவாதம் செய்கிறோம், அங்கேதான் நாம் நமது வித்தியாச பேதங்களைக் குறித்து வாக்குவாதம் செய்கிறோம், குறை கூறுகின்றோம்: 'ஓ, தெய்வீக சுகமளித்த¬ல் எனக்கு நம்பிக்கையில்லை. தேவனிடமிருந்து வருகிற அந்தத் தரிசனங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் இதை நம்ப மாட்டேன்; நான் அதை நம்ப மாட்டேன்.' நீங்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள்... ல் ஜீவிக்கிறீர்கள். ஆயினும் நீங்கள் மன்னாவைப் புசித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் செயற்கையான வெளிச்சத்தின் கீழ் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது சரியே. சிலசமயங்களில், வெளிச்சங்கள் அணைந்து விடுகிறது. சிலசமயங்களில் உங்களுடைய விளக்கு புகைந்து விடுகிறது, ஆனால் மறைக்கப்பட வேண்டுமென்று வாஞ்சிக்கிறவனுக்கோ, அவன் அடுத்த ஸ்தலத்திற்குள் நடந்து செல்கிறான், அங்கு எங்கேயும் செயற்கையான எந்த வெளிச்சமும் கிடையாது. ஆனால் இந்தக் கேருபீமின் செட்டைகளின் வளைவுக்கிடையே, அதில் கீழே, அங்கே உள்ளே தொங்கிக்கொண்டிருந்த ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஒளி இருந்தது, அது தேவனுடைய ஒரு ஒளிவட்டமாக (a Halo of God) இருந்தது, அது அறை முழுவதற்கும் வெளிச்சம் கொடுத்தது. ஒரு மனிதன் ஒருமுறை அந்த ஷெக்கினா மகிமைக்குள் பிரவேசித்தான் (அல்லேலூயா!), அது அங்கே சர்வவல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்தில் திரும்பிச் செல்கிறது. (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தைத் தட்டுகிறார் - ஆசிரியர்.) இந்த உலகத்தின் மங்கின வெளிச்சமும், எந்தச் செயற்கையான ஸ்தாபனங்களும், மனிதனால் உண்டாக்கப்பட்ட எல்லா கோட்பாடுகளும் ஒழிந்து போய் விட்டன, அவன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஷெக்கினா மகிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 47. எனது சகோதரர்களே, ஜீவிக்கும்படியான அந்த இடத்திற்காக நாம் தேவனிடம் வேண்டிக்கொள்வோம். நாம் எழுந்து நிற்போமா. ஓ அன்புள்ள இயேசு கிறிஸ்துவே, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனே, சகோதர சிநேகத்திற்குப் பிறகு பெயரிடப்பட்ட, பிலதெல்பியா சபை என்று அழைக்கப்படும், இந்தச் சிறு சபையின் வாசஸ்தலத்தில் இப்பொழுது இந்தப் பிற்பகல் வேளையில் இங்கே நின்று கொண்டிருக்கும் எனது அன்புள்ள சகோதர சகோதரிகள், அன்புள்ள தேவனே, மேய்ப்பர் முதல் ஒவ்வொரு சுவிசேஷகர் வரையில், தெய்வீக பிரசன்னத்தி¬ருக்கிற நன்கு அறியப்பட்ட ஒவ்வொரு மேய்ப்பரோ அல்லது போதகரோ, (அவர்களிடத்தில்) நீர் இரக்கமுள்ளவராயிருக்க வேண்டுமென்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். மேலும் ஓ தேவனே, நாங்கள் அதைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்து, சுய தியாகத்துடனே, மிகத் துரிதமாக ஷெக்கினா மகிமையை நோக்கி வேகமாக பாய்ந்து சென்று (rush), அங்கே நாங்கள் ஓடிக்கொண்டே பூமியைக் கடக்காமலும், மனிதர்களோடு குறை கூறிக்கொண்டிராமலும், இது சரியா இல்லையா என்று வாக்குவாதம் செய்யாமலும் இருந்து, ஆனால் அவருடைய பிரசன்னத்தில் ஜீவிக்கவும் தங்கியிருக்கவும் செய்து, அவரோடு மறைக்கப்பட்டவர்களுக்காக அங்கே குவித்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அந்த மன்னாவைப் புசிக்கும் வரையில், பரிசுத்த ஆவியானவர் தாமே சிலுவையின் மேல் எங்களுடைய இருதயங்களை மிக இறுக்கமாக மூடி மறைத்துக்கொள்வாராக. இதை அருளும், கர்த்தாவே. 48. அந்த ஆசீர்வாதம் தாமே இந்தக் கன்வென்சன் கூட்டத்தின் மேல் விழுந்து, ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் இங்கிருந்து சென்று, சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஷெக்கினா மகிமையின் கீழாக மறைக்கப்படுவார்களாக. இதை அருளும் பிதாவே, உமது ஊழியக்காரர்களாகிய எனது சகோதர சகோதரிகளுக்காக இயேசுவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதத்தை நான் வேண்டிக் கொள்ளுகிறேன். ஆமென். நான் விசுவாசிக்கிறேன். ஓ, நான் அவரைக் கண்டு, அவரது முகத்தை நோக்கிட வாஞ்சிக்கிறேன், அங்கே அவரது இரட்சிப்பின் கிருபையைப்பற்றி என்றென்றும் பாடுவேன்; மகிமையின் தெருக்களில் நான் எனது சத்தத்தை உயர்த்திடுவேன், ஓ, அப்பொழுது கவலைகள் யாவும் தீரும், என்றும் மகிழ்ந்திட இறுதியில் (பரம) வீட்டில் (வந்திடுவேன்). அவருடைய நாமத்துக்கு துதி உண்டாவதாக. நான் அவரை நேசிக்கிறேன். ஒருபோதும் விலகிப்போகாத, ஷெக்கினா மகிமையின் பிரசன்னத்தில் நின்று கொண்டு, என்றும் மகிழ்ந்திட. இதுவே என்னுடைய வரலாறு. இதுவே என்னுடைய பாடல். எல்லா - நாள் பூராவும் அவருடைய பிரசன்னத்தில் துதித்துப் பாடிக் கொண்டிருப்பேன். பரிபூரணமாக சமர்ப்பித்து விட்டேன், எல்லாமும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. நானும் எனது இரட்சகரும் என்றென்றுமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். அதுதான் அது. நாம் எவ்வளவாக அவரை நேசிக்கிறோம். நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? ஓ, நான் அவரைக் காண எவ்வளவாக விரும்புகிறேன். இதுவே என் வரலாறு, இதுவே என் பாடல், நாள் முழுவதும் என் இரட்சகரை துதித்துக் கொண்டிருப்பேன்; இதுவே என் வரலாறு, இதுவே என் பாடல், நாள் முழுவதும் என் இரட்சகரை துதித்துக் கொண்டிருப்பேன்.